காவல் கோட்டம்
காவல் கோட்டம் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | காவல் கோட்டம் |
ஆசிரியர்(கள்): | சு. வெங்கடேசன் |
வகை: | புதினம் |
துறை: | தமிழிலக்கியம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 1048[1] |
பதிப்பகர்: | தமிழினி பதிப்பகம்[1] |
காவல் கோட்டம், 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். இது எழுத்தாளர் சு. வெங்கடேசனால் எழுதப்பட்டது.
கதைக்களம்[தொகு]
2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சிக் களத்தில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்தப் புதினம் மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தில் நடைபெறுவதாக அமைகிறது. தெலுங்கு நாயக்கர்களும், கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாவல். இது தவிர ஆங்காங்கே மதுரை நகரின் வரலாற்றைக் கூறுவது போலவும் உள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[2]
“ | நாவல் எழுதத் தொடங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம். | ” |
— தினமலர், டிசம்பர் 29, 2011 |
விமர்சனங்கள்[தொகு]
இந்த நூலில் இவர் கையாண்ட வரலாற்றுக் குறிப்புகள் பல வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக்குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. இப்புதினத்தை ஆதரித்து எழுத்தாளர் ஜெயமோகனும்[3] எதிர்த்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும்[4][5] எழுதியுள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "காவல் கோட்டம் - நூல் மதிப்புரை". 2012-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 24, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ மதுரை, மதுரை பதிப்பு (December 27, 2011). "மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்குச் "சாகித்திய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் (மதுரை). http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795.
- ↑ ஜெயமோகன். "காவல்கோட்டம் 1". ஜெயமோகன். டிசம்பர் 24, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ எஸ்.ரா. "காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் - 1". எஸ்.ரா. டிசம்பர் 24, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ எஸ்.ரா. "காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2". எஸ்.ரா. 2014-07-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 24, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
புற இணைப்புகள்[தொகு]
- களவியல் காரிகை - காவல் கோட்டத்துக்கு ஆ. இரா. வேங்கடாசலபதியின் முகவுரை பரணிடப்பட்டது 2012-01-08 at the வந்தவழி இயந்திரம்
- காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் - 1 - எஸ். இராமகிருஷ்ணன்
- காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2 - ஏஸ். இராமகிருஷ்ணன்
- காவல்கோட்டம் 1 : வரலாற்றை மீள எழுதுதல் - ஜெயமோகன்
- காவல்கோட்டம் 2 : வரலாற்றில் வண்ணம் சேர்த்தல் - ஜெயமோகன்
- காவல்கோட்டம் 3 : ஆக்கல் அழித்தலின் ஆட்டம் - ஜெயமோகன்
- காவல்கோட்டம் 4 : வரலாற்றை சாராம்சப்படுத்துதல் - ஜெயமோகன்
- காவல்கோட்டம் 5 : காவல் கோட்டத்தில் இலக்கிய இடம் - ஜெயமோகன்
- "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்திய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்
- புத்தகத் தெருக்களில் - நான்: காவற்கோட்டம் மற்றும் சடச்சி மக்கள் - ரிஷியா[தொடர்பிழந்த இணைப்பு]