ஒரு சிறு இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சிறு இசை வண்ணதாசனின் பன்னிரெண்டாவது சிறுகதைத்தொகுதி. இத்தொகுதியில் 15 சிறுகதைகள் உள்ளன. வண்ணதாசனுக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்கள் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும் உறவும் அதிகமாகப் பேசப்படுகிறது. முதுமையின் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இத்தொகுதியில் உள்ளன. தாமிரபரணி ஆற்றின் நீர்மையுடன், கதைகள் சிலவற்றில் இசை தென்படுகிறது. இச்சிறுகதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி (2016) விருது கிடைத்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AKADEMI AWARDS (1955–2016)". 2015-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_சிறு_இசை&oldid=3546985" இருந்து மீள்விக்கப்பட்டது