காதுகள் (புதினம்)
தோற்றம்
காதுகள் (Kathugal) என்பது எம். வி. வெங்கட்ராம் எழுதிய ஒரு தமிழ் புதினமாகும். இந்நூல் 1993 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலாகும்.[1] [2][3]
கதைச்சுருக்கம்
[தொகு]தாமச சக்தி என்று கூறிக்கொள்ளும் காளி தெய்வமானவர், முருக பக்தனான மகாலிங்கத்தை ஒலி, காட்சி, வாசனை எனப் பல வடிவங்களில் அரூபமாக அலைக்கழித்து, ஓட ஓட வாழ்க்கையின் ஓரத்துக்கு விரட்டி அல்லல்படுத்தும் அனுபவங்கள்தான் இந்த புதினம்.[4]
பின்னணி
[தொகு]எம். வி. வெங்கட்ராம், தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதினார்.[5] இவருக்கு இவ்வாறான மாயக் குரல்கள் கேட்டு அதனால் பல ஆண்டுகள் துன்புற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஷங்கர்ராமசுப்ரமணியன் (2020-05-17). "மனிதனின் தனி நரகத்தைச் சொல்லும் 'காதுகள்'". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-10.
- ↑ AKADEMI AWARDS (1955-2019)
- ↑ சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள்
- ↑ மனிதனின் தனி நரகத்தைச் சொல்லும் ‘காதுகள்’, கட்டுரை, ஷங்கர்ராமசுபரமணியன்
- ↑ காதுகள் (Kaathugal)