தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006
தோற்றம்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
| வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
|---|---|---|---|---|
| 1 | மரபுக்கவிதை | புத்த மகா காவியம் | வலம்புரி சோமநாதன் | வானதி பதிப்பகம், சென்னை. |
| 2 | புதுக்கவிதை | உதய நகரிலிருந்து | இரா. மீனாட்சி | கபிலன் பதிப்பகம், புதுச்சேரி. |
| 3 | புதினம் | நீர்வலை | எஸ். ஷங்கரநாராயணன் | அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,சென்னை. |
| 4 | சிறுகதை | வெண்ணிலை | க. வேணுகோபால் | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
| 5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | அரவான் | எஸ். ராமகிருஷ்ணன் | உயிர்மை பதிப்பகம், சென்னை. |
| 6 | சிறுவர் இலக்கியம் | மணக்கும் பூக்கள் | கவிஞர் செல்லகணபதி | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
| 7 | திறனாய்வு | சிலம்பொலியார் அணிந்துரைகள் | சிலம்பொலி செல்லப்பன் | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
| 8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | படகு - ஒரு திராவிட மொழி | டாக்டர் இரா.கு.ஆல்துரை | நெலிகோலு பதிப்பகம், உதகமண்டலம். |
| 9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | முறிந்த மனங்கள் | டாக்டர் டி.ஆர்.சுரேஷ் | விழிகள் பதிப்பகம், சென்னை. |
| 10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | ----- | ----- | ----- |
| 11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | சைவத் தொகையகராதி | முனைவர் சிவ.திருச்சிற்றம்பலம் | திருவரசு புத்தக நிலையம், சென்னை. |
| 12 | பயண இலக்கியம் | சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள் | சாந்தகுமாரி சிவகடாட்சம் | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
| 13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | கவியரசு கண்ணதாசன் கதை | வணங்காமுடி | கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. |
| 14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | மதராசப்பட்டினம் | கே. ஆர். நரசய்யா | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
| 15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | ஒலி நூறு | முனைவர் தி.சே.சுப்பராமன் | மீனாட்சி மொழியகம், சென்னை. |
| 16 | பொறியியல், தொழில்நுட்பம் | நிலநீர் அறிவியல் (பாகம் 1 & 2) | கே. ஆர். திருவேங்கடசாமி | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
| 17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | தமிழரின் அடையாளங்கள் | முனைவர் க.நெடுஞ்செழியன் | பாலம், சென்னை. |
| 18 | சட்டவியல், அரசியல் | தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006 | ஆர்.சண்முகராஜன், ஜி.சுந்தரராஜன், வி.கோவிந்தராஜன், வி.கண்மணி |
ரவிசுப்பிரமணியம் பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
| 19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | நிறுவன அமைப்பியல் வளர்ச்சி | வெ. குருமூர்த்தி, ஷீலா ஈசுவரமூர்த்தி | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
| 20 | மருந்தியல், உடலியல், நலவியல் | காக்க காக்க இதயம் காக்க | டாக்டர் கே.பாலசந்தர் | கவிநயா பதிப்பகம், சென்னை. |
| 21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | புற்றுநோயும் சித்த மருத்துவமும் | டாக்டர் த. சதீஷ்குமார் | தாமரை நூலகம், சென்னை. |
| 22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | மார்க்சியம் பெரியாரியம் | கோவை ஞானி | காவ்யா பதிப்பகம், சென்னை. |
| 23 | கல்வியியல், உளவியல் | கல்வியியல் மதிப்பீடு புள்ளியியல் ஆராய்ச்சி | டாக்டர் க. ராஜாம்பாள் ராஜகோபால் | சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை. |
| 24 | வேளாண்மையியல், கால்நடையியல் | சுயதொழில் முனைவோருக்கான வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள் | ஜோ.ஜான்.குணசேகர், மு.ரா.லதா, சு.சுந்தரலிங்கம், சி.சிவகுமார், எம்.மாரிமுத்து, வை.பிரபாகரன், இரா.சுதா, க.முத்துக்கிருஷண்ன, க.கவிதா, குரு அரங்கநாதன் |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
| 25 | சுற்றுப்புறவியல் | நிகழ் காலத்திற்கு முன்பு | சா. கந்தசாமி | நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை, திருச்சி. |
| 26 | கணிணியியல் | ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள் | ம. லெனின் | சிக்ஸ்த் ஸென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், சென்னை. |
| 27 | நாட்டுப்புறவியல் | தமிழர் வழிபாட்டு மரபுகள் | முனைவர் ஆறு.இராமநாதன் | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் |
| 28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
| 29 | இதழியல், தகவல் தொடர்பு | எல்லாம் தரும் இதழியல் | ம. லெனின் | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
| 30 | பிற சிறப்பு வெளியீடுகள் | பரவசமூட்டும் பறவைகள் | வாண்டுமாமா | திருவரசு புத்தக நிலையம், சென்னை. |
| 31 | விளையாட்டு | சாதனை படைத்த நட்சத்திர வீரர்கள் | டி. வி. சுப்பு | ஸ்ரீ லஷ்மி பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
குறிப்புகள்
- நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) வகைப்பாட்டில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறைகளின்படி இல்லாததால் பரிசுக்குக் கருதப்படும் நிலை எழவில்லை.