ஆசிரியர் தலையங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியர் தலையங்கம் அல்லது ஆசிரியவுரை (editorial) என்பது ஒரு நாளிதழ், இதழ் அல்லது எழுதப்பட்ட ஆவணம் ஒன்றின் மூத்த ஆசிரியர் அல்லது வெளியீட்டாளரால் எழுதப்பட்ட கட்டுரையாகும். இது பெரும்பாலும் கையொப்பமிடப்படுவதில்லை. த நியூயார்க் டைம்ஸ்,[1] தி பாசுடன் குளோப்[2] போன்ற அமெரிக்க செய்தித்தாள்கள் பெரும்பாலும் தலையங்கங்களை "கருத்து" என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்துகின்றன. விளக்கப்படத் தலையங்கங்கள் கேலி ஓவியங்களின் வடிவத்தில் எழுதப்படுகின்றன.[3]

பொதுவாக, ஒரு நாளிதழின் ஆசிரியர் குழு, வாசகர்கள் எந்தப் பிரச்சினைகளை முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பதை மதிப்பிட்டு, செய்தித்தாளின் கருத்தை எழுதுகிறார்கள்.[4]

தலையங்கங்கள் பொதுவாக ஆசிரியர் தலையங்கப் பக்கம் என அழைக்கப்படும் ஒரு தனிப்பட்ட பக்கத்தில் வெளியிடப்படுகின்றன, இப்பக்கம் பெரும்பாலும் பொதுமக்களிடம் இருந்து ஆசிரியருக்கான கடிதங்களையும் கொண்டுள்ளது. ஒரு செய்தித்தாள் முதல் பக்கத்தில் தனது ஆசிரியத் தலையங்கத்தை வெளியிடத் தேர்வு செய்யலாம்.[5]

பெரும்பாலான நாளிதழ்கள் தலைமை எழுத்தாளரின் பெயர் இல்லாமல் தலையங்கத்தை வெளியிடுகின்றன. தி கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் டொம் கிளார்க், இது வாசகர்கள் ஆசிரியரை விடப் பிரச்சினையை விவாதிப்பதை உறுதி செய்கிறது என்று கூறுகிறார்.[6] அதேவேளையில், ஒரு ஆசிரியத் தலையங்கம் ஒரு செய்தித்தாளினதும் அதன் தலைமையினதும், ஆசிரியரினதும் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆசிரியர் பெரும்பாலும் தலையங்கத்தை தாங்களே எழுதமாட்டார்கள், அவர்கள் மேற்பார்வை செய்து அதன் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்_தலையங்கம்&oldid=3739742" இருந்து மீள்விக்கப்பட்டது