கரண்ட் (1992 திரைப்படம்)
தோற்றம்
கரண்ட் करंट | |
---|---|
இயக்கம் | கே. அரிகரன் |
திரைக்கதை | ஓங்கர்நாத் மிஸ்ரா |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | நாடகத் திரைப்படம் |
விநியோகம் | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
வெளியீடு | 14 பெப்ரவரி 1992 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
கரண்ட் (Current (1992 film)) என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வழியாக கே. அரிகரன் இந்தித் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்காக அவர் இப்படத்தை எழுதி இயக்கினார்.[1] இப்படத்தில் ஓம் பூரி, தீப்தி நவால் ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இந்தப் படம் இந்திய கிராமப்புற விவசாயிகளின் அவலநிலையை பேசுபொருளாகக் கொண்டது. திரைப்படத்தின் கதைக்களம் சாகித்ய அகாதமி பெற்ற தமிழ் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.[2]
கதை
[தொகு]இந்தியாவில் அன்றைய அதிகாரவர்க்கம் மற்றும் அரசியலில் ஊழல் நிறைந்த அமைப்புகளைக் கையாள்வதில் சோர்வுற்ற ஒரு விவசாயியின் வாழ்க்கைப் போராட்டத்தை படம் காட்டுகிறது.
நடிகர்கள்
[தொகு]- ஓம் பூரி
- தீப்தி நவால்
- ஸ்ரீராம் லகூ
- சவிதா புரபுனே ராதாவாக
- அச்யுத் போட்டார்
- தீபக் காசிர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Current". இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம். Retrieved 30 May 2015.
- ↑ "Meet the author" (PDF). சாகித்திய அகாதமி. Retrieved 24 May 2021.