ஸ்ரீராம் லகூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீராம் லகூ
2010இல் ஸ்ரீராம் லகூ
பிறப்பு(1927-11-16)16 நவம்பர் 1927
சாத்தாரா, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 திசம்பர் 2019(2019-12-17) (அகவை 92)
புனே, மகாராட்டிரம், இந்தியா
கல்விமருத்துவர்
படித்த கல்வி நிறுவனங்கள்புனே, பி.ஜே. மருத்துவக் கல்லூரி
பணிநடிகர், நாடகக் கலைஞர், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
செயற்பாட்டுக்
காலம்
1927–2019
வாழ்க்கைத்
துணை
தீபா லகூ

ஸ்ரீராம் லகூ (Shriram Lagoo) (16 நவம்பர் 1927 - 17 திசம்பர் 2019) இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் திரைப்பட மற்றும் நாடக நடிகராக இருந்தார். மேலும் இவர் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார். திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக பெயர் பெற்றவர். இந்தி மற்றும் மராத்தித் திரைப்படங்கள், இந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி நாடகங்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்ட மராத்தி நாடகங்களையும் இயக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மராத்தி நாடக அரங்கின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார். முற்போக்கான மற்றும் பகுத்தறிவுள்ள சமூக காரணங்களை மேம்படுத்துவதில் இவர் மிகவும் குரல் கொடுத்து, சுறுசுறுப்பாக இருந்தார். எடுத்துக்காட்டாக, 1999ஆம் ஆண்டில், இவரும் சமூக ஆர்வலர் ஜி. பி. பிரதானும் ஊழல் எதிர்ப்புப் போர்வீரர் அண்ணா அசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.[1] காரோந்தா என்ற இந்திப் படத்திற்காக 1978 ஆம் ஆண்டு பிலிம்பேர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். "லாமான்" ("பொருட்களை சுமப்பவர்") என்ற பெயரில் இவரது சுயசரிதை எழுதப்பட்டது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் மகாராட்டிராவின் சாத்தாரா மாவட்டத்தில் பாலகிருஷ்ணா சிந்தாமன் லகூ மற்றும் சத்தியபாமா லகூ ஆகியோரின் நான்கு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். இவர் பாவே உயர்நிலைப் பள்ளி, பெர்க்குசன் கல்லூரி ( புனே பல்கலைக்கழகம் ) மற்றும் இந்தியாவின் பி. ஜே மருத்துவக் கல்லூரி (புனே பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் பயின்றார். மேலும் மருத்துவத்தையும் படித்தார்.[3]

தொழில்[தொகு]

இவர், மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், "முற்போக்கு நாடக சங்கம்" என்ற குழு மூலம் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். இது பால்பா கெல்கர் போன்ற மூத்த நண்பர்களுடன் தொடங்கப்பட்டது.[4] இதற்கிடையில், ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மும்பை பல்கலைக்கழகத்தில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றார். கூடுதல் பயிற்சிக்காக கனடா மற்றும் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு புனேவில் ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.[5]

1960களில், புனே, இந்தியா, தன்சானியாவின் தபோராவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டார். ஆனால் இந்தியாவில் இருந்தபோது புனேவில் முற்போக்கு நாடக சங்கம், மும்பையில் "ரங்காயன்" மூலம் இவரது நாடக செயல்பாடு தொடர்ந்தது. இறுதியாக, 1969ஆம் ஆண்டில் மராத்தி மேடையில் முழுநேர நடிகரானார். வசந்த் கனேத்கர் எழுதிய இத்தே ஓஷாலாலா மிருத்யு என்ற நாடகத்தில் அறிமுகமானார்.

இறுதியாக 1969ஆம் ஆண்டில் வசந்த் கனேத்கரின் "வேர் டெத் ஷைட் அவே" நாடகத்திலிருந்து ஒரு முழுநேர நாடக நடிகராக பணியாற்றத் தொடங்கினார். குசுமாகரசு (விஷ்ணு வாமன் ஷிர்வாட்கர்) எழுதிய 'நாதசாம்ராட்' நாடகத்தில் இவர் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். மேலும் அந்த பாத்திரத்திற்காக சிறந்த முறையில் நினைவுகூரப்பட்டார். மேலும், மராத்தித் திரைப்படத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க இடத்திலிருந்தார். அங்கு இவர் சிங்காசன், பிஞ்ச்ரா, முக்தா போன்ற வெற்றிப் படங்களில் தோன்றினார்.

மத நம்பிக்கைகள்[தொகு]

ஸ்ரீராம் ஒரு மத சார்பற்ற பகுத்தறிவாளராக இருந்தார்.[6]

விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Support pours in for Hazare[தொடர்பிழந்த இணைப்பு] இந்தியன் எக்சுபிரசு,13 August 1999.
  2. 100 years of Cinema: நசிருதீன் ஷா, 2 May 2013.
  3. Dharwadker, Aparna (2007). "Lagoo, Shreeram". in Leiter, Samuel L.. Encyclopedia of Asian Theatre: O-Z. I. Greenwood Press. பக். 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33531-0. https://books.google.com/books?id=fttNAAAAYAAJ&q=Shreeram+Lagoo. 
  4. "Curtain goes up on a new act at PDA". Times Of India. 13 October 2001. 
  5. Lagoo, Shreeram (1 January 2011). Lamaan (Marathi ). Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8171858989. 
  6. "Hindus feel hurt by Dr. Shreeram Lagoo's frank opinion that the Idols were just "stones" for him". Archived from the original on 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  7. "Aamir Khan to receive special Dinanath Mangeshkar award". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 10 April 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. ‘Marathi theatres’ pristine glory will be restored’ இந்தியன் எக்சுபிரசு, 4 August 2007.
  9. Ministry of Culture(16 February 2010). "Declaration of Sangeet Natak Akademi fellowships (Akademi Ratna) and Akademi Awards (Akademi Puraskar) for the year 2009". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராம்_லகூ&oldid=3573628" இலிருந்து மீள்விக்கப்பட்டது