உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட்டிகித்தீரா பொறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்ட்டிகித்தீரா பொறிமுறை (/ˌæntɪkɪˈθrə//ˌæntɪkɪˈθrə/ ANT-i-ki-THEERANT-i-ki-THEER or /ˌæntɪˈkɪθərə//ˌæntɪˈkɪθərə/ ANT-i-KITH-ə-rəANT-i-KITH-ə-rə) என்பது பண்டைய கிரேக்கத்தில் நாட்காட்டிகளைக் கணிக்கும் பொருட்டு வானியல் நிலைகளையும் கிரகணங்களையும் ஆராயவும் இன்னபிற வானியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு தொடர்முறை ஆகும். மேலும் கணிப்பொறியும் சூரியக் குடும்ப மாதிரியும் ஆகும். மேலும் இது ஒலிம்பிக் விளையாட்டைப் போன்றதொரு விளையாட்டு போட்டிகளுக்கான பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் நான்காண்டு-கால சுழற்சியைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

1900 ஆம் ஆண்டு, கிரேக்கத்தைச் சேர்ந்த ஆன்டிகைதேரா எனும் தீவின் அருகில் ஆழ்நீர் தாவிகள் மற்றும் கப்பல் படை அதிகாரிகரிகள் கடலுக்கடியில் கண்டெடுத்த பல உரோமானிய கலைப்பொருள்களுள் கடலரித்து நைந்த நிலையில் வெண்கலத்தினாலான பல பல் தட்டுருளிகள் கொண்ட கடிகாரம் போன்ற ஒரு பொருளையும் கண்டனர். 200-100 பொமுவில் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கருவியானது, ஞாயிறு மற்றும் நிலவின் இருப்பிடத்தை கணிக்கவும், நிலவின் சுழற்சி நிலையை அறியவும், கிரகணங்களை அறியவும், எகிப்திய நாள்காட்டியின் படி 30 நாட்கள் கொண்ட திங்கள்களை கணக்கிடவும், 120 ஆண்டுக்கான ராசி நிலையும், பிற கோள்களின் நிலையையும் கணக்கிடவும், ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட பல பல் தட்டுருளிகளின் சுற்றுதலால் கணிக்கப்பட்டு கடிகாரத்தில் இருப்பதுகோல் வட்ட எண் முகப்பில், முட்கள் வாயிலாக காட்டிடும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விசைமுறை (ஒப்புமை) கணினித் தொழில் புரட்சிக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை சிக்கலான கணகுகளுடன் இந்த கருவியானது உருவாக்கப்பட்டிருந்ததால், இது ஞாலத்தின் முதல் விசைமுறை (ஒப்புமை) கணினியாக கருதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]