உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரச வர்த்தமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வர்த்தமானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கை வர்த்தமானி
The Sri Lanka Gazette
இலங்கை வர்த்தமானி (சிறப்பு)
வகைவர்த்தமானி
வெளியீட்டாளர்இலங்கை அரசு
அரசு அச்சகத் திணைக்களம்
நிறுவியது1802
மொழிஆங்கிலம்,
சிங்களம்,
தமிழ்
தலைமையகம்118, டொக். டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 8, இலங்கை
இணையத்தளம்documents.gov.lk
1802 மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட இலங்கை அரச வர்த்தமானியின் முதலாவது இதழின் முன்பக்கம்.

இலங்கை வர்த்தமானி (The Sri Lanka Gazzette) அல்லது அரச வர்த்தமானி என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன்[1] இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது [2]. இது சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.

வரலாறு

[தொகு]

பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை 1796 ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.[3] தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரித்தானிய அரசின் செய்திகளைக் கொண்டு செல்வதற்காக 1802 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தமானி (The Ceylon Government Gazette) என்ற பத்திரிகையை முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்டனர். தமது குடியேற்ற நாடுகளில் இவ்வாறான பத்திரிகைகள் பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்டு வந்துள்ளன. 1784 இல் கல்கத்தா வர்த்தமானி (Calcutta Gazette), 1780 இல் சென் லூசியா வர்த்தமானி (St. Lucia Gazette), 1800 இல் கேப்டவுன் வர்த்தமானி (Cape Town Gazette), ஆப்பிரிக்க வர்த்தமானி (African Advertiser) போன்றவை இவற்றில் சிலவாகும்.[4] இலங்கை வர்த்தமானியின் முதல் இதழ் 1802 மார்ச்சு 15 இல் வெளிவந்தது.[5] இது டச்சு இலங்கைக் காலத்தில் 1737 இல் நிறுவப்பட்ட பதிப்பகத்தில் பிரான்சு டி புருயின் என்பவரால் அச்சிடப்பட்டது.[6][7] இதன் தமிழ்ப் பதிப்பு 1806 இலும் சிங்களப் பதிப்பு 1814 இலும் ஆரம்பிக்கப்பட்டது.[1]

1972 ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அறிவித்ததோடு இலங்கை மேலாட்சியை இல்லாதொழித்தார். இதனையடுத்து அரச வர்த்தமானி 15,011 வது இதழுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த செயவர்தனா அரசு 1978 இல் புதிய அரசியலமைப்பை நிறுவியதை அடுத்து வர்த்தமானி மீண்டும் வெளியிடப்பட்டது.[1]

உசாத்துணைகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Sri Lanka Gazette celebrates 200 years today". Presidential Secretariat of Sri Lanka. 15 March 2002. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. வர்த்தமானி 200 ஆண்டு நிறைவில் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது 9 பெப்ரவரி, 2007 (ஆங்கில மொழியில்)
  3. De Silva, K. M. (1981). qil26YC A history of Sri Lanka. University of California Press. pp. 234–235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-04320-6. {{cite book}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Black, Jeremy (2002). vPX0gC Europe and the World, 1650–1830. ஐக்கிய இராச்சியம்: Routledge. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-041-5255-69-1. {{cite book}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "The Government Gazette". சண்டே டைம்சு. 18 மார்ச்சு 2007.
  6. "It happened in March: Weekly news in the Government Gazette". த சண்டே டைம்சு. 12 மார்ச்சு 2006.
  7. "Rolling out the words". த சண்டே டைம்சு. 10 மார்ச்சு 2002. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அரச_வர்த்தமானி&oldid=3544389" இலிருந்து மீள்விக்கப்பட்டது