உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினத்திற்கான விக்கிபீடியாவின் இலச்சினை
அதிகாரப்பூர்வ பெயர்அனைத்துலக குழந்தைகள் தினம்
கடைபிடிப்போர்பல்வேறு நாடுகள்
நாள்நாடுகளுக்குத் தகுந்தாற் போல் மாறுபடும்
நிகழ்வுவருடம்தோறும்
தொடர்புடையனஉடன்பிறப்புகள் தினம் , உலக ஆண்கள் தினம்

குழந்தைகள் தினம் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு (கிழமை) அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் தினம் என ஆனது.[1][2][3]

அனைத்துலக குழந்தைகள் தினம்[தொகு]

அனைத்துலக குழந்தைகள் தினம் டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பன்னாட்டு குழந்தைகள் நாள்[தொகு]

பன்னாட்டு குழந்தைகள் நாள் பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.

கிரிகோரியன் நாள்காட்டி
நிகழ்வு நாள் நாடுகள்
ஜனவரி முதல் வெள்ளி ஜனவரி 6, 2017  பஹமாஸ்
ஜனவரி 11  தூனிசியா
ஜனவரி இரண்டாவது சனி ஜனவரி 14, 2017  தாய்லாந்து
பெப்ரவரி இரண்டாவது ஞாயிறு பெப்ரவரி 12, 2017  குக் தீவுகள்

 நவூரு

 நியுவே

 டோக்கெலாவ்

 கேமன் தீவுகள்

பெப்ரவரி 13  மியான்மர்
மார்ச் முதல் ஞாயிறு மார்ச் 5, 2017  நியூசிலாந்து
மார்ச்17  வங்காளதேசம்

இந்தியா[தொகு]

இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இலங்கை[தொகு]

இலங்கையில் குழந்தைகள் தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.

அர்கெந்தீனா[தொகு]

அர்கெந்தீனா நாட்டில் குழந்தைகள் தின விழாவானது ஆகஸ்டு மாதம் 3 ஆவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

அர்மீனியா[தொகு]

ஆர்மீனியா நாட்டில் சூன் 1 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது.

ஆத்திரேலியா[தொகு]

ஆத்திரேலியாவில் குழந்தைகள் வாரமானது வருடம்தோறும் அக்டோபர் மாதம் நாண்காவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. உலக குழந்தைகள் தினத்திற்கு முந்தைய சனி (கிழமை) முதல் அதற்கு அடுத்த ஞாயிறு (கிழமை) வரை குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினமானது ஆத்திரேலியாவின் பல மாகாணங்களில் நடைபெற்றது. மேலும் நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 1984 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது.[4]

வங்காளதேசம்[தொகு]

வங்காளதேசத்தில் மார்ச் 17 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சேக் முஜிபுர் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் தினமும் கொண்டாடப்படுகிறது.[1] 2009]] ஆம் ஆண்டு முதல் ஜேக்கொ அறக்கட்டளையானது நவம்பர் 20 அன்று நாடு முழுவதும் தொடக்கக்கல்வி மற்றும் குழந்தைகளின் நலம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.

பொலிவியா[தொகு]

பொலிவியாவில் ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

பொசுனியா- எர்செகோவினா[தொகு]

பொசுனியா எர்செகோவினா நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

பல்காரியா[தொகு]

பல்காரியாவில் சூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.[5] இங்கு பாரம்பரியமாக குழந்தைகளை அவர்களின் பிறந்தநாள் போன்றே பரிசுகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். 1925 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

கமரூன்[தொகு]

கமரூன் நாட்டில்1990ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

மத்திய ஆப்பிரிக்கா[தொகு]

கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கமரூன், எக்குவடோரியல் கினி, காபோன், சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் டிசம்பர் 25 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு குழந்தைகள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

சீனா[தொகு]

சீனாவில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சீனக் குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட போது அதன் அமைச்சரவையானது சூன் 1 அன்று அரை நாள் விடுமுறை நாளாக அறிவித்தது. பின்பு 1956 ஆம் ஆண்டு முதல் முழுநாள் விடுமுறை தினமாக அறிவித்தது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பேரணி , இலவச திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர்.

கொலம்பியா[தொகு]

கொலம்பியாவில் ஏப்ரல் மாதம் கடைசி சனி (கிழமை) அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2001 ஆம்

ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

கோஸ்ட்டா ரிக்கா[தொகு]

கோஸ்ட்டா ரிக்காவில் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

கியூபா[தொகு]

கியூபாவில் சூலை மாதம் மூன்றாவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

செக் குடியரசு[தொகு]

செக் குடியரசு சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. 1950 ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

எக்குவடார்[தொகு]

எக்குவடோர் நாட்டில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிகள் வழங்குவர்.

எகிப்து[தொகு]

எகிப்து நாட்டில் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Reading Eagle – Google News Archive Search". பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  2. "THE SHARON BAPTIST CHURCH". Archived from the original on 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Today is Universal Children's Day – Christian Adoption Services". Archived from the original on 16 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Children's Week History". Queensland Children's Week Association. 2007. Archived from the original on 3 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. M3 Web – http://m3web.bg (1 June 2009). "Bulgaria Marks International Children's Day: Bulgaria Marks International Children's Day – Sofia News Agency". Novinite.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012. {{cite web}}: External link in |author= (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைகள்_நாள்&oldid=3929111" இலிருந்து மீள்விக்கப்பட்டது