உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பிரட் ஹிட்ச்காக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிட்ச்கொக்

ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் (ஆகஸ்ட் 13, 1899 - ஏப்ரல் 29. 1980) பிரபல ஆங்கிலத் திரைப்பட இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். சுமார் 60 வருடங்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். ஊமைத் திரைப்படங்கள் தொடங்கி, கறுப்பு - வெள்ளை திரைப்படங்கள், வண்ணத் திரைப்படங்கள் என பலவித திரைப்படங்களை உருவாக்கினார்.

தொடந்து பல வெற்றி படங்களை இயக்கி, தனது காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இயக்குனராகத் திகழ்ந்தார். பல மர்மப் படங்களை இயக்கிய இவர், தனது சிறந்த இயக்கும் பாணிக்காக இன்றும் பேசப்படுகிறார்.

சுயசரிதை

[தொகு]

ஆரம்ப வாழ்க்கை 1899 - 1930

[தொகு]

பிரிட்டனில் பிறப்பு

[தொகு]

ஆல்பிரட் ஹிட்ச்காக் 13 ஆகத்து 1899 ஆம் ஆண்டில் லேடன்ஸ்டோன் என்னும் இடத்தில் பிறந்தார் அப்போது லேடன்ஸ்டோன் எசக்ஸ்சின் ஒரு பகுதியாக இருந்தது ஆனால் இப்போது லண்டனின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இவர் உடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன் வில்லியம் ஹிட்ச்காக் (1862–1914) மற்றும் ஒரு அக்கா எம்மா ஜேன் ஹிட்ச்காக் (1863–1942). ஆல்பிரட் ஹிட்ச்காக் தான் கடைக்குட்டி. தந்தையின் சகோதரரின் பெயர்தான் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது ஒரு ரோமன் கதோலிக்கராக வளர்க்கப்பட்டார் மற்றும் சாலிசியன் கல்லூரிக்கும் [2] மற்றும் லண்டன் ஸ்டான்போர்டு ஹில்லில் உள்ள புனிதர் இக்னீசியஸ் கல்லூரிக்கும் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.[3][4] இவரது பெற்றோரின் மூதாதையர் ஆங்கிலேயர் மற்றும் ஐரிஸ் வழிவந்தவர்களாக இருந்தனர்.[5][6] அவரின் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் காரணமாக பெரும்பாலும் விட்டிற்குள் அடைப்பட்டிருந்தாக விவரிக்கிறார்.[7] ஹிட்ச்காக்கின் ஐந்தாம் அகவையில் தனது மோசமான நடத்தைக்கு அவரது தந்தை இவருக்கு பாடம் புகட்ட அவரது கைகளில் ஒரு கடிதம் தந்து அதை அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் கொடுக்கும் படி அனுப்பிவைத்தார். அதில் ஹிட்ச்காக்கிற்கு தண்டனையாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவரை சிறையில் பூட்டி விடுமாறு கேட்டுக் கொண்டார்.[8] இந்த சம்பவத்தால் ஹிட்ச்காக் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் காவல்துறையினர் பற்றிய அச்சம் கொள்ள வைத்தது, மற்றும் அவரது திரைப்படங்களில் இத்தகைய கடுமையான சிகிச்சை மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் அடிக்கடி கருப்பொருள்களாக உள்ளன. [9]

பிரித்தானிய மெளனத் திரைப்படம்

[தொகு]

ஹிட்ச்காக் அவரது இளம் வயதிலேயே திரைப்பட ரசிகராக இருந்தார், மேலும் 1919 ஆம் ஆண்டில் இருபது வயதில் அவரது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார், ஐலிங்டன் ஸ்டுடியோவில் இருந்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமான Famous Players-Lasky லண்டன் கிளையின் தலைப்பு அட்டை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார்.[10] 1922 ஆம் ஆண்டில் லண்டனில் Famous Players-Lasky வெளியேற்றப்பட்ட பின்னர், ஹிட்ச்காக் ஸ்டூடியோ ஊழியர்களின் ஒருவராகத் தொடர்ந்து வந்தார். 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "எப்போதும் மனைவியிடம் கூறுங்கள்" என்ற குறும் படத்தில் பணிபுரிந்த மைக்கேல் பால்கன் மற்றும் பிறர் தொடங்கிய ஒரு புதிய நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார்.[11][12][13] காலப்போக்கில் பால்கனின் கம்பெனி Gainsborough Pictures என்ற பெயரைப் பெற்றது.[12][14]

ஹிட்ச்காக் தலைப்பு அட்டை வடிவமைப்பாளர் பணியில் இருந்து இயக்குநராக மாற ஐந்தாண்டுகள் ஆனது. மேலும் பால்கன் மற்றும் இயக்குநர் கிரஹாம் கட்ஸ் ஆகியோரிடம் திரைக்கதை, கலை மற்றும் இணை இயக்குநராகத் தொடர்ந்து ஐந்து படங்களுக்குப் பணியாற்றினார்.[15]

பேசும் படங்களின் ஆரம்பம்

[தொகு]

ஹிட்ச்காக் தன்னுடைய பத்தாவது படமான பிளாக்மெயில்க்கான (Blackmail) (1929) வேலைகளைத் துவங்கினார், அதன் தயாரிப்பு நிறுவனமான பிரித்தானிய இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் (BIP) அதன் எல்ஸ்டி வசதிகளை ஒலியுடன் கூடிய படமாக மாற்றுவதற்கும், பிளாக்மெயில் படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் முடிவெடுத்தது. இது முதன் முதலாக வெளிவந்த "பேசும்" (talkie) என்ற திரைப்படம் ஆகும், இது திரைப்பட வரலாற்று ஆசிரியர்களால் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படமாக [16] மேற்கோள் காட்டப்பட்டது, மேலும் பெரும்பாலும் இதுவே முதல் பிரித்தானிய பேசும் திரைப்படமாக கருதப்படுகிறது.[17][18]

பிளாக்மெயில் மூலம் ஹிட்ச்காக் தனது படைப்புகளின் வரிசையில் கதையில் மர்மங்கள் நிறைந்த பின்புலமாக பிரபலமான அடையாளச்சின்னங்களைப் பயன்படுத்தும் பாரம்பரிய பாணியை தொடங்கினார், அவரது பெரும்பாலான திரைப்படங்களின் உச்சக்கட்டம் என்று அழைக்கப்படும் கதையின் முடிவு பிரித்தானிய அருங்காட்சியகத்தின் குவிமாடம் பகுதியில் தான் எடுக்கப்பட்டது. மேலும் அவரது படங்களில் லண்டன் நகரத்து சுரங்கப்பாதையில் தனியாக புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் ஒரு நீண்ட நெடிய காட்சிகள் இலக்கிய தரத்தில் இருக்கும்.[19] அவரது PBS வரிசை படங்களில் திரைப்படங்களை தாயாரித்த மனிதன் (The Men Who Made The Movies),[20] ஹிட்ஸ்காக், ஆரம்பகால ஒலிப்பதிவு எப்படி திரைப்படத்தின் ஒரு சிறப்பு அம்சமாக பயன்படுத்தினார் என்று விளக்கினார், கொலையாளி என்று சந்தேகம் கொண்ட பெண்ணுடன் ஒரு உரையாடலில் "கத்தி" என்ற வார்த்தையை வலியுறுத்தினார்.[21] இந்த காலகட்டத்தில், ஹிட்ச்காக் BIP நிறுவனம் தயாரித்த இசைத்தொகுப்பின் சில பகுதிகள் இயக்கிக்கொடுத்தார மேலும் இரண்டு குறும் படங்களை இயக்கி ஒரு வார இதழ் வழங்கிய உதவித்தொகையை ஒரு மீள் விவகாரம் (1930) என்ற தலைப்பு கொண்ட தொகுப்பிற்காக வென்றார்.

ஆரம்பகால ஹாலிவுட் வருடங்கள் 1931-1945

[தொகு]

ஹாலிவுட் மற்றும் செல்ஸ்நிக் ஒப்பந்தம்

[தொகு]

டேவிட் ஓ. செல்ஸ்நிக் உடன் ஏழு வருட ஒப்பந்தத்தில் ஹிட்ச்காக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த் ஒப்பந்தம் மார்ச் 1939 இல் தொடங்கி,[22] 1946 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன் மூலம் ஹிட்ச்காக் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார்.[23] அவரது திரைப்படங்களில் ஹிட்ச்காக்கின் வர்த்தக முத்திரையாக மாறிய மர்மம் மற்றும் தூக்கு மேடை நகைச்சுவை காட்சிகள் அவரது அமெரிக்க தயாரிப்புகளிலும் தோன்றியது. செல்ஸ்னிக் உடனான பணி ஏற்பாடுகள் சிறந்த விட குறைவாக இருந்தன. செல்ஸ்னிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை சந்தித்தார், ஹிட்ச்காக் அவரது படங்களில் செல்ஸ்னிக்கின் படைப்புக் கட்டுப்பாட்டோடு அடிக்கடி கோபமடைந்தார். செல்ஸ்நிக் உடனான பணி ஏற்பாடுகள் அவர் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. செல்ஸ்நிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை ஏற்படுத்தினார், மேலும் செல்ஸ்நிக் ஹிட்ச்காக்கிற்கு அவரது படங்களில் பல படைப்புக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதால் அடிக்கடி கோபமடைந்தார். ஒரு பிந்தைய நேர்காணலில், ஹிட்ச்காக் குறிப்பிட்டதாவது, "பெரிய தயாரிப்பாளர் ஆவார் ... தயாரிப்பாளர் என்பதைவிட ராஜாவாக இருந்தார், திரு. செல்ஸ்நிக் எப்பொழுதும் என்னைப் பற்றி இப்படிச் சொன்னார், நீங்கள் தான் எனது 'ஒரே நம்பிக்கைகுறிய இயக்குனர்".[24]

உலகப்போரின் ஆரம்ப வருடங்கள்

[தொகு]

ஹிட்ச்காக் திரைப்படங்கள் 1940 களில் பல களங்களில் இருந்தது, காதலில் ஆரம்பித்து திரு & திருமதி சுமித் (1941) , நீதிமன்றக் நாடகமான சொர்கத்தின் வழக்கு (1947) வரை, இருண்ட படமான சந்தேகத்தின் நிழல் (1943) வரை மாறுபட்டிருந்தது. செப்டம்பர் 1940 இல், ஹிட்ச்காக் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கார்ன்வால் ராஞ்ச், ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கு அருகே சாண்டா க்ரூஸ் மலைப் பகுதியில் வாங்கினார். பின்னாளில் இந்த பண்ணை வீடு ஹிட்ச்காக்கின் விடுமுறை இல்லமாக மாறியது. 1942 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பெல் ஏரில் ஒரு ஆங்கில பாணி வீடாக அவர்களின் முதன்மை குடியிருப்பு இருந்தது.[25] ஹிட்ச்காக் தனது முதல் சொந்த தயாரிப்பாகவும் இயக்குனராகவும் உருவாக்கிய படம் சந்தேகம் (1941). இது இங்கிலாந்தில் பின்புலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டது, மற்றும் ஹிட்ச்காக், ஆங்கிலேய கடற்கரையோர பின்புலத்திற்கு சாண்டா க்ரூஸ், கலிபோர்னியாவின் வட கரையோரத்தைப் பயன்படுத்தினார்.[10] இந்தப் படம் கேரி கிராண்ட் ஹிட்ச்காக் உடன் பணிபுரிந்த நான்கு படங்களில் இது முதல் படம், மேலும் கிராண்ட் ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த அரிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.[10] ஜோன் போண்டேன் [26] அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது [10] வென்றார். கிராண்ட் ஒரு முட்டாள்தனமான நேர்மையற்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட-கலைஞராக நடித்துள்ளார், அவரின் செயல்களால் அவரது கூச்ச சுபாவமுள்ள இளம் ஆங்கில மனைவியான போண்டேனுக்கு சந்தேகத்தையும் கவலையும் எழுப்புகின்றது.[27] ஒரு காட்சியில் ஹிட்ச்காக் ஒரு ஒளி விளக்கை பயன்படுத்தி கிராண்ட் அவரது மனைவிக்கு குடிப்பதற்காக வழங்கும் விசமுள்ள ஒரு அபாயகரமான பால் தருவதை விவரிப்பார். இந்த திரைப்படம் ஒரு பத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது அதில் திரைப்படத்தில் கிராண்ட் நடிக்கும் பாத்திரம் ஒரு கொலைகாரனாக சித்தரிக்ப்பட்டிருக்கும். அதனால் ஹிட்ச்காக் படத்தின் முடிவை சிறிது மாற்றம் செய்தார்.[28]

போர்க்கால யதார்த்த படங்கள்

[தொகு]

1943 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1944 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையிலும் ஹிட்ச்காக் இங்கிலாந்திற்குத் திரும்பினார். அங்கு அவர் பிரித்தானிய தகவல் தொடர்பு அமைச்சகத்திற்காகப் பிரஞ்சு மொழியில் பான் வாயேஜ் மற்றும் அவென்சர் மால்கே என்ற இரண்டு குறும் படங்களை இயக்கினார்.[29] சுதந்திர பிரஞ்சு தேசம் உருவாக்க பிரித்தானிய அமைச்சகத்திற்காக ஹிட்ச்காக் பிரஞ்சு மொழியில் எடுத்த முதலும் கடைசியுமான படம். வழக்கம் போல இந்தப் படத்திலும் அவரது பாணிகளைப் பயன்படுத்திருப்பார். திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அவரது நோக்கத்தை ஹிட்ச்காக் பின்வருமாறு குறிப்பிட்டார்: "யுத்த முயற்சிகளுக்கு ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்; மேலும் இராணுவ சேவைக்கு தேவைபடக்கூடிய வயதும் உடல் திறனும் தனக்கு இல்லை போன்ற காரணங்களும் இருந்தன. இதை நான் செய்யாமல் இருந்திருந்தால் மீதமுள்ள வாழ்நாள் முமுவதும் வருத்தப்பட்டிருப்பேன்".

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mogg, Ken. "Alfred Hitchcock". Senses of Cinema. Sensesofcinema.com. Archived from the original on 28 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Alfred Hitchcock profile at". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
  3. "Death and the Master". Vanity Fair. April 1999. Archived from the original on 28 November 2010. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
  4. "Welcome to St Ignatius College". Archived from the original on 15 March 2008. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008.
  5. McGilligan, 2003, p. 7
  6. Spoto, Donald (1999). The Dark Side of Genius: The Life of Alfred Hitchcock. Da Capo Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-80932-3.
  7. McGilligan, 2003, pp. 18–19
  8. "{{{title}}}". The Dick Cavett Show. 8 June 1972.
  9. McGilligan, 2003, pp. 7–8
  10. 10.0 10.1 10.2 10.3 "Local Inspiration for Movie Classics: Hitchcock had Link to Santa Cruz". Santa Cruz Public Libraries, Ca. Archived from the original on 5 September 2007.
  11. Miller, Henry K. "Always Tell Your Wife (1923)", screenonline.org.uk; retrieved 25 August 2016.
  12. 12.0 12.1 McGilligan, 2003, pp. 46–51
  13. screenonline.org.uk; retrieved 25 August 2016.
  14. "Gainsborough Pictures (1924–51)". British Film Institute ScreenOnline. பார்க்கப்பட்ட நாள் 6 March 2008.
  15. Truffaut 1984
  16. Rob White, Edward Buscombe. British Film Institute film classics, Volume 1 p. 94. Taylor & Francis, 2003
  17. Richard Allen, S. Ishii-Gonzalès. Hitchcock: Past and Future. p.xv. Routledge (2004). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415275253
  18. Music Hall Mimesis in British Film, 1895–1960: on the halls on the screen p.79. Associated University Presse (2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780838641910.
  19. Walker, Michael (2005) Hitchcock's motifs. p. 88. Amsterdam University Press
  20. "American Masters-Alfred Hitchcock". Public Broadcasting System. Archived from the original on 19 March 2008. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008.
  21. McGilligan, 2003, pp. 120–23
  22. Life (magazine), 19 June 1939, p. 66: "Alfred Hitchcock: England's Best Director starts work in Hollywood". Retrieved 22 August 2017
  23. Leff, 1999, p. 35
  24. Sidney Gottlieb, Alfred Hitchcock: Interviews By Alfred Hitchcock. Illustrated Edition. (Univ. Press of Mississippi, 2003). p. 206.
  25. "Alfred Hitchcock Dies Of Natural Causes". Variety Obituaries. 7 May 1980. Truffaut argues that the portly Englishman belonged "among such artists of anxiety as Kafka, Dostoyevsky and Poe.
  26. "Joan Fontaine". Hollywood.com. Archived from the original on 25 March 2008. பார்க்கப்பட்ட நாள் 24 August 2017.
  27. Tom Scott Cadden (1984). "What a bunch of characters!: an entertaining guide to who played what in the movies". p. 131. Prentice-Hall,
  28. Leitch, 2002, pp. 324–25.
  29. "Alfred Hitchcock's Bon Voyage & Aventure malgache". Milestone Films. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_ஹிட்ச்காக்&oldid=3924573" இலிருந்து மீள்விக்கப்பட்டது