ஐரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Euro symbol.svg
ஐரோ
ευρώ (கிரேக்கம்), евро (சிரில்லிக்)
வங்கித் தாள்கள்
வங்கித் தாள்கள்
ISO 4217 குறியீடு EUR (num. 978)
புழங்கும் நாடு(கள்) ஐரோப்பிய ஒன்றியம்;

ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், அண்டோரா, மொனாக்கோ, சான் மரீனோ, வாட்டிகன் நகரம், மொண்டெனேகுரோ,

கொசோவோ.
பணவீக்கம் 1.4%, திசம்பர் 2012
மூலம் ஐரோ வலயம், May 2005
சிற்றலகு
1/100 சதம்
குறியீடு
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5 ,10, 20, 50 சென்ட் நாணயம், €1, €2
அரிதான பயன்பாடு 1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்)
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு €5, €10, €20, €50
அரிதான பயன்பாடு €100, €200, €500
வழங்குரிமை ஐரோப்பிய மத்திய வங்கி
வலைத்தளம் www.ecb.int
Euro 2015

ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.[1] இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.

அதிகாரப்பூர்வ அமைப்பு[தொகு]

யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும்.

இயல்பு[தொகு]

நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்[தொகு]

Euro coins and banknotes.jpg
அனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்.

ஒரு ஐரோ நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக பிரான்ஸ் தேசத்தில் சென்டிமேஸ் என்றும் ஸ்பெயின் தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

நாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் அரபி எண்களும் பயன்படுத்தப்படுகிறது.

மின்னணு நிதி பரிமாற்றம்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும்.

நாணய குறியீடு[தொகு]

யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது.[3]

நேரடி மற்றும் மறைமுக புழக்கம்[தொகு]

நேரடி புழக்கம்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது.[2] ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும்.

இருப்பு நாணயம்[தொகு]

அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது. உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.[4]

யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்[தொகு]

உலகளவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் பயன்பாடு:
  வெளியில் இருந்து யூரோவை ஏற்றுக்கொண்டவர்கள்
  யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்
  குறுகிய மாற்றங்களுடன் யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்
  வெளியில் இருந்து அமெரிக்க டாலரை ஏற்றுக்கொண்டவர்கள்
  அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்
  குறுகிய மாற்றங்களுடன் அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்

யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர்.[2]

பொருளாதாரம்[தொகு]

உகந்த நாணய பகுதி[தொகு]

பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Rosenberg, Matt (23 May 2010). "Euro Countries: 22 Countries use the Euro as their Official Currency". About.com. பார்த்த நாள் 08 November 2013.
  2. 2.0 2.1 2.2 Population Reference Bureau. "2013 World Population Data Sheet" (PDF). பார்த்த நாள் 2013-11-08.
  3. "The €uro: Our Currency". ஐரோப்பிய ஒன்றியம். மூல முகவரியிலிருந்து 11 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17-11-2007.
  4. "Will the Euro Eventually Surpass the Dollar As Leading International Reserve Currency?" (PDF). பார்த்த நாள் 17-11-2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோ&oldid=1856193" இருந்து மீள்விக்கப்பட்டது