உள்ளடக்கத்துக்குச் செல்

லக்சம்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்சம்பேர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லக்சம்பர்க் பெரிய டச்சி
Groussherzogtum Lëtzebuerg (லக்சம்பர்கிஷ்)
Grand-Duché de Luxembourg (பிரெஞ்சு)
Großherzogtum Luxemburg (செருமன் மொழி)
கொடி of லக்சம்பர்க்
கொடி
குறிக்கோள்: "Mir wëlle bleiwe wat mir sinn"  (லக்சம்பர்கிய மொழி)
"We want to remain what we are"
நாட்டுப்பண்: Ons Hémécht
"நம்ம நாடு"
லக்சம்பர்க்அமைவிடம்
தலைநகரம்லக்சம்பர்க்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு, ஜெர்மன், லக்சம்பர்கியம்
(1984 முதல் de jure)
மக்கள்லக்சம்பர்கர்
அரசாங்கம்நாடாளுமன்ற அரசியலமைப்புசட்ட பெரிய டச்சி
• பிரதான டியுக்
பிரதான டியுக் ஹென்ரி
ஜான்-கிளாட் ஜங்கர்
விடுதலை
ஜூன் 9 1815
ஏப்ரல் 19 1839
மே 11 1867
• ஒன்றியத்தின் முடிவு
நவம்பர் 23 1890
பரப்பு
• மொத்தம்
2,586.4 km2 (998.6 sq mi) (175வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
480,222 (171வது)
• 2001 கணக்கெடுப்பு
439,539
• அடர்த்தி
186/km2 (481.7/sq mi) (59வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$32.6 பில்லியன் (97வது)
• தலைவிகிதம்
$81,511(2006) (1வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$40.577 பில்லியன் (65வது)
• தலைவிகிதம்
$87,995 (1வது)
மமேசு (2004)0.945
அதியுயர் · 18வது
நாணயம்ஐரோ ()2 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (நடு ஐரோப்பா)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (நடு ஐரோப்பா)
அழைப்புக்குறி352
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLU
இணையக் குறி.lu3
  1. நெதர்லாந்தின் ஹெட் வில்ஹெல்மஸ் வேறு.
  2. 1999க்கு முன் லக்சம்பர்க் ஃபிராங்க்.
  3. .eu அடையாளமும் பயன்படுகிறது

லக்சம்பர்க் (Luxembourg), மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. இங்கு 2,600 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஐந்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழ்கின்றனர்.

லக்சம்பர்கில், அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சியுடன் நாடாளுமன்ற மக்களாட்சி செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக லக்சம்பர்க் பங்கு வகித்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கான லக்சம்பர்க்கின் புரிந்துணர்வை அறியலாம். இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமுமான லக்சம்பர்க் நகரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை இடமாக விளங்குகிறது.

இங்கு, பிரெஞ்சு மற்றும் லக்சம்பர்கிய மொழியே அன்றாட வாழ்வில் மிகையாகப் பயன்பட்டாலும், ஜெர்மன் மொழியும் அலுவல்முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமய சார்பற்ற நாடாக இருந்த போதிலும், லக்சம்பர்கில் உரோமக் கத்தோலிக்கர்கள் மிகுந்த அளவில் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சம்பர்க்&oldid=3697124" இலிருந்து மீள்விக்கப்பட்டது