கன்வர்ட்டிபிள் மார்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கன்வர்ட்டிபிள் மார்க்கு
konvertibilna marka (பொஸ்னிய மொழி) (குரவோஷிய மொழி) (செருபிய மொழி) (லத்தீன் எழுத்துரு)
конвертибилна марка (செருபிய மொழி)(சிரில்லிக் எழுத்துரு)
ஐ.எசு.ஓ 4217
குறி BAM
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 ஃபென்னிங்
குறியீடு KM
வங்கிப் பணமுறிகள் 10, 20, 50, 100, 200 maraka
Coins 5, 10, 20, 50 ஃபெனிங்கா, 1, 2, 5 மராக்கா
மக்கள்தொகையியல்
User(s) பொசுனியா எர்செகோவினாவின் கொடி பொசுனியா எர்செகோவினா
Issuance
நடுவண் வங்கி பொசுனியா எர்செகோவினா மத்திய வங்கி
 Website www.cbbh.ba
Valuation
Inflation -0.4%
 Source The World Factbook, 2009 கணிப்பு
Pegged with யூரோ (1 யூரோ = 1.95583 கன்வர்ட்டிபிள் மார்க்குகள்)

கன்வெர்ட்டிபிள் மார்க் (பொஸ்னிய மொழி: konvertibilna marka; ஆங்கிலம்: convertible mark; சின்னம்: KM; குறியீடு: BAM) பொசுனியா எர்செகோவினா (பொஸ்னியா) நாட்டின் நாணயம். இது 100 பெனிக்குகள் அல்லது பெனிங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

1991 வரை பொஸ்னியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. யுகோஸ்லாவிய உள்நாட்டுப் போர் (பால்கன் உள்நாட்டுப் போர்) தீவிரமாக நடைபெற்ற இடங்களில் பொஸ்னியாவும் ஒன்று. சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட பொஸ்னியா, பொஸ்னியா ஹெர்செகோவினா தினார் நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் 1995ல் டேடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடன், தினாருக்கு பதில் கன்வர்ட்டிபிள் மார்க் பொஸ்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. “மார்க்” என்ற சொல் அப்போது ஜெர்மனியின் நாணயமாக இருந்த டாய்ச்சு மார்க்கின் பெயரிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. கன்வர்ட்டிபிள் என்ற ஆங்கில சொல்லுக்கு ”மாற்றத்தக்க” என்று பொருள். மற்ற நாட்டு நாணயங்களுடன் மாற்ற கூடிய நாணயமாக இது அறிமுகப்படுத்தப் பட்டதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. ஒரு மார்க்கில் 100 ஃபென்னிங்குகள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

  1. "BH Currency – KM Banknotes and Coins". Sarajevo: Central Bank of Bosnia and Herzegovina. "Fening details: | Mint: Royal Mint, London | Released into Circulation: December 9th, 1998, with the exception of the 5 fening coin which is in circulation from January 5, 2006. | Face: Map of BH with overlay of denomination | Reverse: Flag of BH | The Words: "Bosna i Hercegovina" and "Fening" are on the face and reverse edges in both Latin and Cyrillic script. The date of production is on the reverse side on the left from the BH flag. | 10, 20 and 50 fening coins are made of copper-plated steel, while 5 fening coin is made of nickel-plated steel."