ஐரோ வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூரோ பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யூரோவலயம்
Eurozone 2015
The eurozone as of 2015
  ஐரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் ஐரோ வலயத்தில் இல்லாத நாடுகள்
நாணயம்ஐரோ
ஒன்றிய வகைபொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம்
தோற்றம்1999
உறுப்பினர்கள்
ஆட்சி முறை
அரசியல் அமைப்புஐரோ குழுமம்
குழுமத் தலைவர்ஜான்-க்ளாட் ஜங்கர்
வழங்குரிமைஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி)
ஈசிபி தலைவர்ஜான்-க்ளாட் திரிஷே
சார்புஐரோப்பிய ஒன்றியம்
புள்ளி விவரம்
மக்கள் தொகை328,597,348
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி)8.4 டிரில்லியன்[1]
வட்டி விகிதம்1%[2][3]
பணவீக்கம்0.3%[4]
வேலைவாய்ப்பின்மை10%[5]
வாணிப நிலை€22.3 பில்லியன் மிகை[6]

யூரோவலயம் (Eurozone; About this soundஒலிப்பு , யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (Euro Area) என்றழைக்கப்படுகிறது.

தோற்றம்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:

1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.

2. அரசின் நிதி நிலைமை

அ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
ஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).

3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.

4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.

1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.

விரிவாக்கம்[தொகு]

en:Council of Europeஅல்பேனியாஆர்மீனியாஅசர்பைஜான்பொசுனியா எர்செகோவினாகுரோவாசியாஜோர்ஜியாமல்தோவாமொண்டெனேகுரோமாக்கடோனியாஉருசியாசெர்பியாஉக்ரைன்en:European Free Trade Associationசுவிட்சர்லாந்துலீக்டன்ஸ்டைன்ஐஸ்லாந்துநோர்வேen:European Union Customs Unionஅண்டோராதுருக்கிசான் மரீனோமொனாக்கோஐரோப்பிய ஒன்றியம்பல்கேரியாருமேனியாஐக்கிய இராச்சியம்செக் குடியரசுடென்மார்க்ஹங்கேரிலாத்வியாலித்துவேனியாபோலந்துசுவீடன்ஐரோ வலயம்சைப்ரசுஅயர்லாந்துஆத்திரியாபெல்சியம்எசுத்தோனியாபின்லாந்துபிரான்சுசெருமனிகிரேக்க நாடுஇத்தாலிலக்சம்பர்க்மால்டாநெதர்லாந்துபோர்த்துகல்சுலோவாக்கியாசுலோவீனியாஎசுப்பானியாen:European Economic Areaen:Schengen Areaen:International status and usage of the euro#States with issuing rightsவத்திக்கான் நகர்
வேறுபட்ட ஐரோப்பிய அமைப்பின் பல்தேசியங்களுக்கிடையிலான உறவுகளைக் காட்டும் சொடுகக்கூடிய வரைபடம்.vde

ஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.

டென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.

நிருவாகம்[தொகு]

ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே

ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.




உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

நாடு ஐஎசுஓ குறியீடு இணைந்த ஆண்டு (சனவரி 1 முதல்) 2021 இல் மக்கள்தொகை[7] மொ.தே.வ, 2021 $மில்லியன்[8] மொதேவ மொத்த யூரோவலயத்தின் பின்னம் மொதேவ தலைக்கு 2021இல் $ முந்தைய நாணயம் முந்தைய நாணயமும் பயன்படுத்தப்பட்டது முந்தைய நாணயத்திற்கு யூரோவை மாற்றும் விகிதம்[9] யூரோ பயன்படுத்தப்படாத பிரதேசங்கள்
ஆஸ்திரியா AT 1999[10] 89,32,664 4,72,474 3% 52,893 சில்லிங்கு 13.7603
பெல்ஜியம் BE 1999[10] 1,15,54,767 5,85,375 4% 50,661 பிராங்கு லக்சம்பர்க் 40.3399
குரோவாசியா HR 2023[11] 40,36,355 68,724 0% 17,026 குனா 7.53450
சைப்பிரசு CY 2008[12] 8,96,007 25,634 0% 28,609 பவுண்டு 0.585274 வடக்கு சைப்பிரசு[a]
எசுத்தோனியா EE 2011[13] 13,30,068 35,219 0% 26,479 குரூன் 15.6466
பின்லாந்து FI 1999[10] 55,33,793 2,96,473 2% 53,575 மார்க்கா 5.94573
பிரான்சு FR 1999[10] 6,76,56,682 29,91,553 21% 44,217 பிராங்கு அந்தோரா
மொனாக்கோ
6.55957 நியூ கலிடோனியா[b]
பிரெஞ்சு பொலினீசியா[b]
வலிசும் புட்டூனாவும்[b]
செருமனி DE 1999[10] 8,31,55,031 42,98,325 30% 51,690 மார்க்கு 1.95583
கிரேக்கம் GR[c] 2001[14] 1,06,78,632 2,12,807 1% 19,928 திராச்மா 340.750
அயர்லாந்து IE 1999[10] 50,06,324 3,83,084 3% 76,520 பவுண்டு 0.787564
இத்தாலி IT 1999[10] 5,92,36,213 21,27,119 15% 35,909 லீரா சான் மரீனோ
வத்திக்கான் நகர்
1936.27
லாத்வியா LV 2014[15] 18,93,223 37,295 0% 19,699 லாட்சு 0.702804
லித்துவேனியா LT 2015[16] 27,95,680 60,884 0% 21,778 லித்தாசு 3.45280
லக்சம்பர்க் LU 1999[10] 6,34,730 56,449 0% 88,934 பிராங்கு பெல்ஜியம் 40.3399
மால்ட்டா MT 2008[17] 5,16,100 15,948 0% 30,901 லீரா 0.429300
நெதர்லாந்து NL 1999[10] 1,74,75,415 9,67,837 7% 55,383 கில்டர் 2.20371 அரூபா[d]
குராசோ[e]
சின்டு மார்தின்[e]
கரிபியன் நெதர்லாந்து]][f]
போர்த்துகல் PT 1999[10] 1,02,98,252 2,46,714 2% 23,957 எசுக்கூடோ 200.482
சிலோவாக்கியா SK 2009[18] 54,59,781 1,12,424 1% 20,591 கொருனா 30.1260
சுலோவீனியா SI 2007[19] 21,08,977 59,608 0% 28,264 தோலர் 239.640
எசுப்பானியா ES 1999[10] 4,73,98,695 14,07,936 10% 29,704 பெசெட்டா அந்தோரா 166.386
யூரோவலயம் EZ[g] பொருத்தமில்லை 34,65,97,389[h] 1,44,61,883 100% 41,725 பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை மேலே பார்க்க

குறிப்புகள்[தொகு]

  1. வடக்கு சைப்பிரசின் துருக்கிக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, அது துருக்கிய லிராவைப் பயன்படுத்துகிறது.
  2. 2.0 2.1 2.2 French Pacific territories use the CFP franc, which is pegged to the euro at the rate of 1 franc to 0.00838 euro.
  3. The European Union internally uses the code EL for Greece, a deviation from the ஐ.எசு.ஓ 3166-1 standard.
  4. Aruba is part of the Kingdom of the Netherlands, but not of the EU. It uses the Aruban florin, which is pegged to the US dollar at the rate of 1 dollar to 1.79 florins.
  5. 5.0 5.1 Currently uses the Netherlands Antillean guilder and is planning to introduce the Caribbean guilder in 2025, after the change was delayed several times. "CBCS wants to have the Caribbean guilder introduced by 2025". Curaçao Chronicle. 16 March 2022. https://www.curacaochronicle.com/post/local/cbcs-wants-to-have-the-caribbean-guilder-introduced-by-2025/.  "Frequent Asked Questions". Centrale Bank Curaçao & Sint Maarten. 2 August 2022 அன்று பார்க்கப்பட்டது. Both are pegged to the US dollar at the rate of 1 dollar to 1.79 guilders.
  6. அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துகிறது.
  7. EZ is not assigned, but is reserved for this purpose, in ISO-3166-1.
  8. Includes the population of Croatia, even though it was not a eurozone member in 2021.

மேற்கோள்கள்[தொகு]

ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, பிராங்க்ஃபுர்ட்
  1. The euro: An international currency, Europa (web portal)
  2. WORLD INTEREST RATES TABLE, FX street
  3. Key ECB interest rates, ECB
  4. HICP - all items - annual average inflation rate Eurostat
  5. Harmonised unemployment rate by gender - total - [teilm020]; Total % (SA) Eurostat
  6. For the whole of 2009. Euroindicators 17 February 2010 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம், Eurostat
  7. "Population on 1 January". Eurostat.
  8. "GNI, Atlas method (current US$) | Data | Table (updated 2022-12-22)". 2023-01-01 அன்று பார்க்கப்பட்டது.
  9. "EU countries and the euro". ஐரோப்பிய ஆணையம். 2022-12-02 அன்று பார்க்கப்பட்டது.
  10. 10.00 10.01 10.02 10.03 10.04 10.05 10.06 10.07 10.08 10.09 10.10 "COUNCIL DECISION of 3 May 1998 in accordance with Article 109j(4) of the Treaty". Official Journal of the European Union L (139/30). 11 May 1998. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:31998D0317&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  11. "Council Decision (EU) 2022/1211 of 12 July 2022 on the adoption by Croatia of the euro on 1 January 2023". 12 July 2022. https://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/?uri=CELEX%3A32022D1211&qid=1664779252884. பார்த்த நாள்: 2 January 2023. 
  12. "COUNCIL DECISION of 10 July 2007 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Cyprus of the single currency on 1 January 2008". Official Journal of the European Union L (186/29). 18 July 2007. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32007D0503&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  13. "COUNCIL DECISION of 13 July 2010 in accordance with Article 140(2) of the Treaty on the adoption by Estonia of the euro on 1 January 2011". Official Journal of the European Union L (196/24). 28 July 2010. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32010D0416&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  14. "COUNCIL DECISION of 19 June 2000 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Greece of the single currency on 1 January 2001". Official Journal of the European Union L (167/19). 7 July 2000. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32000D0427&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  15. "COUNCIL DECISION of 9 July 2013 on the adoption by Latvia of the euro on 1 January 2014". Official Journal of the European Union L (195/24). 18 July 2013. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32013D0387&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  16. "COUNCIL DECISION of 23 July 2014 on the adoption by Lithuania of the euro on 1 January 2015". Official Journal of the European Union L (228/29). 31 July 2014. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32014D0509&from=EN. பார்த்த நாள்: 31 December 2014. 
  17. "COUNCIL DECISION of 10 July 2007 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Malta of the single currency on 1 January 2008". Official Journal of the European Union L (186/32). 18 July 2007. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32007D0504&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  18. "COUNCIL DECISION of 8 July 2008 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Slovakia of the single currency on 1 January 2009". Official Journal of the European Union L (195/24). 24 July 2008. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32008D0608&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
  19. "COUNCIL DECISION of 11 July 2006 in accordance with Article 122(2) of the Treaty on the adoption by Slovenia of the single currency on 1 January 2007". Official Journal of the European Union L (195/25). 15 July 2006. http://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/PDF/?uri=CELEX:32006D0495&from=EN. பார்த்த நாள்: 27 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோ_வலயம்&oldid=3631970" இருந்து மீள்விக்கப்பட்டது