சர்வதேச பொருளாதார மந்தநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சர்வதேச பொருளாதார மந்தநிலை என்பது உலகளாவிய அளவில் பொருளாதார மந்தநிலை நிலவும் காலமாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுக்கும்போது பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது, ஆனாலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் அல்லது அதற்கு குறைவான அளவில் உள்ளபோது "சர்வதேச பொருளாதார மந்தநிலை"[1][2] நிலவுவதாக கருதலாம் என்கிறது. இந்த அளவீட்டின்படி, 1985 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது அவை: 1990-1993, 1998 மற்றும் 2001-2002.[3][4]

மேலோட்ட பார்வை[தொகு]

மேலோட்டமாக கூறுவதானால், ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை என்பது அதன் உற்பத்தி குறைவதே ஆகும். ஜூலியஸ் ஷிஸ்கின் என்பவர் 1974 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸில் எழுதிய கட்டுரையில் பொருளாதார மந்தநிலையை கண்டறிவதற்கு பல எளிய விதிகளைப் பரிந்துரைத்தார். அதில் நாட்டின் உற்பத்தியைக் குறிக்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் குறைவது ஒரு அடையாளம் என்றும் கூறுகிறார்.[5] இந்த இரு காலாண்டு அளவீடுதான் தற்போது பொருளாதார மந்தநிலையை வரையறுக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொருளாதார மந்தநிலையை கண்டறியும் மையமாக தேசிய பொருளாதார ஆய்வு துறை (NBER) கருதப்படுகிறது. அது ஒரு மதிப்பீட்டைச் செய்யும் முன்பு GDP இன் வளர்ச்சியை மட்டுமின்றி பல்வேறு அளவீடுகளையும் கணக்கிடுகிறது. அமெரிக்காவைத் தவிர பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலையைக் கண்டறிய மேற்கூறப்பட்ட இரு காலாண்டு விதியும் பயன்படுத்தப்பட்டது.[6]

ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை இரு காலாண்டு வளர்ச்சி வீத குறைவின் மூலம் கண்டறியப்பட்டாலும், சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுப்பது சற்று கடினமானதாகும், ஏனேனில் வளரும் நாடுகளின் GDP வளர்ந்த நாடுகளுடையதை விட அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.[7] IMF இன் கருத்துப்படி, 1980 களின் பிற்பகுதியிலிருந்து GDP வளர்ச்சியின் உண்மையான நிலையானது வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்தும், மேம்பட்ட பொருளாதார நிலைகள் கொண்ட வளர்ந்த நாடுகளில் குறைந்தும் வருகிறது. உலக வளர்ச்சியானது 2007 ஆம் ஆண்டில் 5% இலிருந்து 2008 ஆண்டில் 3.75% க்கு குறையும் என்றும் 2009 ஆம் ஆண்டில் 2% க்கு சற்று அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. GDP வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாக இருக்கக்கூடும். சரக்குகளை ஏற்றுமதி செய்பவை, குறுகிய அந்நிய முதலீடு உடையவை மற்றும் ரொக்க பண சிக்கல் கொண்டவை போன்ற நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டன. கிழக்காசிய நாடுகள்(சீனாவும் அடங்கும்) மிகவும் குறைவான பின்னடைவையே சந்தித்தன, ஏனெனில் அவற்றின் பொருளாதார சூழல்கள் மிகவும் வலுவானவை.சரக்குகளின் விலை வீழ்ச்சி அவற்றுக்கு நன்மையளித்தது, மேலும் அவை விரிவான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கின.[7]

[48] எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மந்தநிலை ஏற்படுவதாக ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது.கடந்த முப்பதாண்டுகளில் ஏற்பட்ட மூன்று சர்வதேச பொருளாதார மந்தநிலைகளின்போது உலகளாவிய தனிநபர் உற்பத்தி வளர்ச்சி வீதமானது பூஜ்யமாக அல்லது எதிர்மறையாக[3] இருந்தது என்று ஐ.எம்.எஃப் கணக்கிட்டுள்ளது.

இதையும் பாருங்கள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "The world economy Bad, or worse". Economist.com. 2008-10-09. http://www.economist.com/finance/displaystory.cfm?story_id=12381879. பார்த்த நாள்: 2009-04-15. 
  2. Lall, Subir. "தீவிரமான சந்தை சிக்கல்களுக்கிடையே உலக வளர்ச்சி குறைந்த வேகத்தில் இருக்கும் என்று IMF கூறுகிறது" சர்வதேச நாணய நிதியம், ஏப்ரல் 9, 2008. http://www.imf.org/external/pubs/ft/survey/so/2008/RES040908A.htm
  3. 3.0 3.1 "Global Recession Risk Grows as U.S. `Damage' Spreads. Jan 2008". Bloomberg.com (2008-01-28). பார்த்த நாள் 2009-04-15.
  4. http://www.imf.org/external/pubs/ft/weo/2009/update/01/index.htm IMF ஜனவரி 2009 புதுப்பிப்பு
  5. Achuthan, Lakshman. "The risk of redefining recession, Lakshman Achuthan and Anirvan Banerji, Economic Cycle Research Institute, May 7, 2008". Money.cnn.com. பார்த்த நாள் 2009-04-15.
  6. ஜப்பான் பொருளாதாரம் 0.4% நலிவுற்றது, இது மந்தநிலையை உறுதிப்படுத்துகிறது வழங்கியவர் ஜேசன் கிளன்ஃபீல்ட்
  7. 7.0 7.1 "IMF World Economic Outlook (WEO) Update - Rapidly Weakening Prospects Call for New Policy Stimulus - November 2008". Imf.org (2008-11-06). பார்த்த நாள் 2009-04-15.

புற இணைப்புகள்[தொகு]