வட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வட்டி என்பது ஒருவரிடமிருந்து பணம் கடனாகப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் வாடகை ஆகும். பணம் கொடுப்பவர், அப்பணத்தைத் தனது சொந்த நுகர்வுத் தேவை உட்பட, வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தாமல் விடுவதற்கான நட்டஈடாகவே இது கொடுக்கப்படுகிறது எனலாம். முதலில் கொடுக்கப்படுகின்ற பணத்தொகை முதல் எனப்படுகின்றது. இவ்வாறு கொடுக்கப்படும் முதலுக்காக ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குக் கொடுக்கப்படும் வட்டி பொதுவாக அம்முதலின் ஒரு விழுக்காடாகவே (நூற்றுவீதம்) கணிக்கப்படுகின்றது. இந்த விழுக்காடு வட்டி வீதம் எனப்படும்.

வட்டியின் வகைகள்[தொகு]

வட்டி அது கணிக்கப்படும் முறையைப் பொறுத்து, எளிய வட்டி, தொடர் வட்டி, உண்மை வட்டி, கூட்டு வட்டி எனப் பலவகைப்படுகின்றது.

சட்டபூர்வமற்ற வட்டியின் வகைகள்[தொகு]

  • கந்து வட்டி
  • மீட்டர் வட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டி&oldid=3408894" இருந்து மீள்விக்கப்பட்டது