செர்பிய தினார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow"

செர்பிய தினார்
Cрпски динар / Srpski dinar (செர்பிய மொழி)
ISO 4217 குறியீடு RSD
புழங்கும் நாடு(கள்) செர்பியாவின் கொடி செர்பியா
பணவீக்கம் 5,1%
மூலம் [1], ஜூலை 2010
சிற்றலகு
1/100 பாரா
குறியீடு РСД மற்றும் RSD
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5, 10, 20 தினார்.
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 10, 20, 50, 100, 200, 500, 1000, 5000 தினார்.
வழங்குரிமை செர்பிய தேசிய வங்கி
வலைத்தளம் www.nbs.rs
வழங்கும் அமைப்பு வங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
வலைத்தளம் www.nbs.rs/export/internet/english/zin
நாணயசாலை வங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
வலைத்தளம் www.nbs.rs/export/internet/english/zin

செர்பிய தினார் (ஆங்கிலம்: Serbian Dinar; சின்னம்: РСД; குறியீடு: RSD) செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பிய_தினார்&oldid=2109517" இருந்து மீள்விக்கப்பட்டது