அச்சுப்பொறி வகைகள்
அச்சுப்பொறிகள் என்பவை செய்தியை வெளியீடு செய்யப் பயன்படும் பொறிகள் ஆகும். அச்சுபொறிகள் பல வகைப்படும். அவை வரி அச்சுப்பொறிகள், புள்ளி அச்சுப் பொறிகள், மைகொட்டும் அச்சுப்பொறிகள், லேசர் அச்சுப்பொறிகள் ஆகும்.[1][2][3]
வரி அச்சுப்பொறிகள்
[தொகு]ஒரு நிமிடத்திற்கு 3000 வரிகள் வரை அச்சிடக்கூடிய வரி அச்சு பொறிகள் உள்ளன. ஆனால் இவைகளால் படங்களை அச்சிட முடியாது.
புள்ளி அச்சுப்பொறிகள்
[தொகு]புள்ளி அச்சுப்பொறிகள் ஒவ்வொரு எழுத்தாக அச்சிடுக்கின்றன. ஒரு நொடியில் 150 முதல் 400 எழுத்துகள் வரை அச்சிடும் திறன் உடையவை.
மை அச்சுப்பொறிகள்
[தொகு]இப்போது மை அச்சுபோறிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அச்சிடும் முனையில் ஊசிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பல மிகச் சிறிய துளைகளை ஏற்படுத்தி மையினை பாய்ச்சி அச்சிடப்படுகிறது.
லேசர் அச்சுப்பொறிகள்
[தொகு]லேசர் அச்சுப்பொறிகள் லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி அச்சிடுகின்றன. அச்சிடும்போது அச்சுப்பொறியின் எந்த பகுதியும் காகிதத்தினைத் தொடுவது இல்லை.
உசாத்துணை
[தொகு]கணிப்பொறி அறிவியல், ராம் குமார், சைவ சிந்தாத்த நூற் பதிப்பு கழகம், சென்னை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Printer".. (22 April 2024).
- ↑ Lovett, A. W (9 September 1980). "The Printing Press as an Agent of Change. Communications and Cultural Transformations in Early-Modern Europe. By Elizabeth L. Eisenstein. 2 vols. Pp xxi, 794. Cambridge: Cambridge University Press. 1979. £40.". Irish Historical Studies 22 (86): 184–185. doi:10.1017/s0021121400026225. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1214. http://dx.doi.org/10.1017/s0021121400026225.
- ↑ Saenger, Paul; Febvre, Lucien; Martin, Henri-Jean (1994). "The Coming of the Book: The Impact of Printing, 1450–1800". History of Education Quarterly 34 (1): 98. doi:10.2307/369239. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2680. http://dx.doi.org/10.2307/369239.