1214
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1214 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1214 MCCXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1245 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1967 |
அர்மீனிய நாட்காட்டி | 663 ԹՎ ՈԿԳ |
சீன நாட்காட்டி | 3910-3911 |
எபிரேய நாட்காட்டி | 4973-4974 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1269-1270 1136-1137 4315-4316 |
இரானிய நாட்காட்டி | 592-593 |
இசுலாமிய நாட்காட்டி | 610 – 611 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1464 |
யூலியன் நாட்காட்டி | 1214 MCCXIV |
கொரிய நாட்காட்டி | 3547 |
1214 (MCCXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 15 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் பிரான்சில் லா ரோச்செல் பகுதியில் ஆக்கிரமிப்புப் படைகளைத் தரையிறக்கினார்.[1]
- சூலை 27 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படையினர் புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ தலைமையிலான செருமானிய, ஆங்கிலேய மற்றும் பிளம்மியப் படைகளை வென்றனர். ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்து, ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரும் (1202–14) நிறைவுற்றது.[1]
- செப்டம்பர் 18 – இங்கிலாந்தின் மன்னர் ஜானுக்கும் பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆஞ்சிவின் பேரரசின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பிற்காக பிரான்சு கேப்பட்டியரை அங்கீகரித்தது.[1]
- அக்டோபர் 5 – காஸ்டிலின் மன்னர் எட்டாம் அல்போன்சோவின் இறப்பை அடுத்து, அவரது மகள் பெரெங்குவேலா காஸ்டிலின் அரசியானார்.[2]
- நவம்பர் 1 – துருக்கியின் கருங்கடல் துறைமுக நகரமான சினோப் செல்யூக்கிடம் வீழ்ந்தது.
- டிசம்பர் 4 – இசுக்காட்லாந்தின் வில்லியம் மன்னர் இறந்தார்.
- சின் வம்ச சீனப் பேரசர் உவான்சொங் செங்கிசுகானின் மங்கோலியப் படைகளிடம் சரணடைந்தார். மங்கோலியர் பெய்ஜிங்கை ஓராண்டு காலம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
- கத்தோலிக்க திருச்சபை வழக்கத்தின் படி, கத்தோலிக்க செபமாலை புனித தோமினிக்கிற்கு மரியாளினால் வழங்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 77–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Linehan, Peter (1999). "Chapter 21: Castile, Portugal and Navarre". In David Abulafia (ed.). The New Cambridge Medieval History c.1198-c.1300. Cambridge: Cambridge University Press. pp. 668–671. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36289-X.