உள்ளடக்கத்துக்குச் செல்

உரோமை எண்ணுருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானியக் கப்பல் ஒன்றில் உரோமை எண்ணுருக்கள், 13 முதல் 22 வரை, கீழிருந்து மேலாகக் காட்டப்பட்டுள்ளன.

உரோமை எண்ணுரு (Roman numerals) முறைமை பண்டைய உரோமில் உருவான ஓர் எண்குறி முறைமையாகும். இம்முறை ஐரோப்பா முழுவதும் பின்னைய நடுக்காலம் வரை நடைமுறையில் இருந்து வந்தது. இது பெறுமானங்கள் கொடுக்கப்பட்ட சில இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. உரோமை எண்ணுருக்கள் பின்வரும் ஏழு அடிப்படைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன:[1]

குறியீடு I V X L C D M
பெறுமதி 1 5 10 50 100 500 1,000

உரோமை எண்ணுருக்கள் உரோமைப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. கிபி 14-ஆம் நூற்றாண்டின் பின்னர், இவை பெரும்பாலும் மிகவும் எளிதான இந்து-அராபிய எண்ணுருக்களாக மாற்றப்பட்டன; ஆனாலும், உரோமை எண்ணுருக்கள் இப்போதும் சில இடங்கலில் பயன்பாட்டில் உள்ளன.

உரோமை எண்ணுரு முறைமை[தொகு]

விக்டோரியா காலத்துக்குப் பிற்பட்ட, "நவீன" ரோம எண்ணுருக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:

ரோமஅராபியகுறிப்பு
எதுவுமில்லை0சைபருக்கான தேவை இருக்கவில்லை.
I1.
II2.
III3.
IV4IIII இப்பொழுதும் மணிக்கூடுகளிலும், சீட்டு அட்டைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
V5.
VI6.
VII7.
VIII8.
IX9.
X10.
XI11.
XII12.
XIII13.
XIV14.
XIX19.
XX20.
XXX30.
XL40.
L50.
LX60.
LXX70.
LXXX80.
XC90.
CC200.
CD400.
D500.
CM900.
M1000.
1000M க்குப் பதிலாக C யும் D யும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
MCMXLV1945.
MCMXCIX1999குறுக்குவழிகள் இல்லாததைக் கவனிக்கவும், I, V அல்லது X க்கு முன் மட்டுமே வரமுடியும்.
MM2000.
MMM3000.
5000.
10000.
Reversed 100Reversed C, used in combination with C and I to form large numbers.

பெரிய எண்களை ரோம எண்ணுருக்களில் எழுதுவதற்குச் சரியான முறை, முதலில் ஆயிரத்திலிருந்து தொடங்கி, நூறு, ஐம்பது, பத்து என எழுதுவதேயாகும்.

 • எடுத்துக்காட்டு: எண் 1988.
 • ஆயிரம் M, தொள்ளாயிரம் CM, எண்பது LXXX, எட்டு VIII.
 • ஒருங்கிணைக்க: MCMLXXXVIII.

உரோமானியர்களின் பொறியியல் திட்டங்கள்[தொகு]

 • மேம்பாலங்கள், பல பொிய சாலைகள், பாலங்கள், பொதுக்கட்டிடங்கள் பலவற்றைக் கட்டினர்.
 • நில அளவை முறையில் வியத்தகு முன்னேற்றம் கண்டனர்.
 • கால்வாய்கள், பாலங்கள் கட்டுவதற்கு சிறிதளவு கணித அறிவை மட்டும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வரலாறு[தொகு]

உரோமை எண்ணுருக்கள் பழைய உரோமை எண்ணுருவான எத்துருசிய (Etruscan) எண்ணுருவிலிருந்து உருவானது. இவ்வடிவமானது இப்போது நாம் பயன்படுத்தும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாகும். எடுத்துக்காட்டாக, I, V, X, L, C, M ஆகிவற்றுக்கு 𐌠, 𐌡, 𐌢, 𐌣, 𐌚, ஆகிய எத்துருசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் I, X ஆகியன மட்டுமே எழுத்துக்களைக் கொண்டிருந்தன.

ரோமானிய எண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் விதிகள்[தொகு]

 • எந்த எண்ணுருவையும் தொடர்ந்து மூன்று முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
 • அதிக மதிப்புள்ள எண் குறியீட்டிற்கு வலப்புறம் குறைந்த மதிப்புள்ள எண்குறியீடு வந்தால் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 • அதிக மதிப்புள்ள எண் குறியீட்டிற்கு இடப்புறம் குறைந்த மதிப்புள்ள எண்குறியீடு வந்தால் கழித்துக் கொள்ள வேண்டும்.
 • '0' என்ற எண்ணைக் குறித்த ரோமானிய எண்முறையில் தனி குறியீடு இல்லை.
 • ரோமானியர்கள் அதிக மதிப்புள்ள எண்களைக் குறித்த எண்ணின் மேல் ஒரு கோடிட்டனர்.

ரோமானிய எண்கள் எண்ணுருக்கள் தற்போது பயன்படுத்தும் இடங்கள்[தொகு]

 • கடிகாரங்கள்
 • புத்தக அறிமுக பக்கங்கள்
 • இசை வடிவங்கள்
 • மன்னர்களின் வழித்தோன்றல்கள்

மேலும் காண்க[தொகு]

எண்குறி முறைமை

மேற்கோள்கள்[தொகு]

 1. Gordon, Arthur E. (1982). Illustrated Introduction to Latin Epigraphy. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520050797. Alphabetic symbols for larger numbers, such as Q for 500,000, have also been used to various degr௭ees of standardization.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமை_எண்ணுருக்கள்&oldid=3439372" இலிருந்து மீள்விக்கப்பட்டது