I
![]() |
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |


I (ஐ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.[1]
ஆங்கிலத்தில்[தொகு]
ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.[2]
ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.[3] இது ஐ என்று பலுக்கப்படும்.[4]
கணிதத்திலும் அறிவியலிலும்[தொகு]
கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.[5] அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[6] காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.[7]
இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[8]
வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.[9]
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]
- İ i : புள்ளியிட்ட இலத்தீன் எழுத்து i
- I ı : புள்ளியடாத இலத்தீன் எழுத்து i
- І і : மென்புள்ளியிட்ட சிரில்லிய எழுத்து i
- И и : சிரில்லிய எழுத்து i
- י : எபிரேய எழுத்து இயோது
- ㅣ : அங்குல் எழுத்து i
- 丨 : கிடை எழுத்துமுறையில் போப்போமோபோ எழுத்து i
- Ι ι : கிரேக்க எழுத்து அயோற்றா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பெரிய எண்களும் உரோமன் எண்குறிகளும்". Educational Publications Department. pp. 6. http://www.edupub.gov.lk/Administrator/Tamil/5/maths%20G-5%20T/cha%202.pdf. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.
- ↑ "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. http://www.math.cornell.edu/~mec/2003-2004/cryptography/subs/frequencies.html. பார்த்த நாள்: 31 ஆகத்து 2015.
- ↑ "Subject Pronouns". CliffsNotes. https://www.cliffsnotes.com/study-guides/spanish/spanish-ii/sentence-and-question-structure/subject-pronouns. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.
- ↑ "I". Oxford Dictionaries. http://www.oxforddictionaries.com/definition/learner/i. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.
- ↑ "Complex number". Encyclopædia Britannica. 20 சனவரி 2015. http://global.britannica.com/topic/complex-number. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Identity matrix". Encyclopædia Britannica. http://global.britannica.com/topic/identity-matrix. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vectors". Revision Maths. http://revisionmaths.com/advanced-level-maths-revision/mechanics/vectors. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.
- ↑ அ. கருணாகரர் (2009). நவீன உயர்தர மாணவர் பௌதிகம் அலகுகள் Iம் IIம் அளவைகள், பரிமாணங்கள், பொறியியல். ரண்யா கிராபிக்ஸ். பக். 7, 187.
- ↑ Karl Christe (10 சூன் 2014). "Iodine (I)". Encyclopædia Britannica. http://global.britannica.com/science/iodine. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]