A

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

A () என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.[2]

மொழிகளில்[தொகு]

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.[3] ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[4] ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.[5]

கணிதத்திலும் அறிவியலிலும்[தொகு]

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[6] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[7]

இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.[8]

வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.[9]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]

சிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்
  • Α α : கிரேக்க எழுத்து அல்பா.
  • А а : சிரில்லிய எழுத்து A.
  • Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
  • ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
  •  : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.[10]
  • ª : ஒரு வரிசைக் காட்டி.
  • Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
  • Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.

மேற்கோள்கள்[தொகு]

  1. Simpson, J. A. & Weiner, E. S. C. (1989). The Oxford English Dictionary. Oxford, UK: Oxford University Press. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-861213-3. 
  2. Kyle, McCarter P. (செப்டம்பர் 1974). "The Early Diffusion of the Alphabet". The Biblical Archaeologist 37 (3): 54-56. 
  3. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
  4. "Percentages of Letter Frequencies per 1000 Words". Trinity College. Archived from the original on 2007-01-25. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. Gelb, I. J. & Whiting, R. M. (1998). "A". Academic American Encyclopedia (1). Ed. In Ranson & K. Anne. Danbury, CT: Grolier Incorporated. 45. 
  6. Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1. 
  7. Hall-Quest, Olga Wilbourne (1997). "A". Collier's Encyclopedia (1). Ed. In Johnston, Bernard. New York, NY: P. F. Collier. 1. 
  8. க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 4. 
  9. "Valence Shell Electron Pair Repulsion Theory". Meta-synthesis. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
  10. "Mathematical Symbols". RapidTables. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்
  •  A – விளக்கம்
  •  a – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=A&oldid=3588338" இலிருந்து மீள்விக்கப்பட்டது