உள்ளடக்கத்துக்குச் செல்

அல்ஃபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

அல்ஃபா (Alpha, கிரேக்கம்: άλφα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் முதலாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஒன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான அல்விலிருந்தே (அல்வு) அல்ஃபா பெறப்பட்டது. அல்ஃபாவிலிருந்து பிறந்த எழுத்துகள் இலத்தீன் எழுத்து A, சிரில்லிய எழுத்து A என்பனவாகும்.

ஆங்கிலத்தில் அல்ஃபா என்பது முதலாவது, தொடக்கம் என்பதற்கான ஒத்த சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[3]

பயன்பாடுகள்

[தொகு]

கிரேக்கம்

[தொகு]

பண்டைய கிரேக்கத்தில் அல்ஃபா என்பது குறிலாக இருக்கும்போது a என்றும் நெடிலாக இருக்கும்போது என்றும் உச்சரிக்கப்பட்டது.

ஆனாலும் நவீன கிரேக்கத்தில் குறில் அல்ஃபா மாத்திரமே பாவனையில் உள்ளது.

அறிவியல்

[தொகு]

அறிவியலில் அல்ஃபாச் சிதைவு, அல்ஃபாத் துணிக்கை முதலியவற்றைக் குறிக்க அல்ஃபா பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு

[தொகு]

அல்ஃபா எனும் எழுத்து எருது என்பதைக் குறிக்கும் பினீசிய எழுத்தான அல்விலிருந்து உருவானது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃபா&oldid=2916483" இலிருந்து மீள்விக்கப்பட்டது