பிளம்மியர்
Appearance
ஃபிளம்மியர் அல்லது ஃபிளம்மிங்கர் (English: "flemish"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜியம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.[1][2][3]
வரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய மாகாணமான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ATLAS – Dutch: Who speaks it?". University College London. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
- ↑ "Flemish, Vlaams". BBC. 14 October 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
- ↑ De Cock, Barbara (2006), Flemish language policy in an era of globalisation (PDF), Gencat.cat, பார்க்கப்பட்ட நாள் 3 May 2017