கன்வர்ட்டிபிள் மார்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்வர்ட்டிபிள் மார்க்கு
konvertibilna marka (பொஸ்னிய மொழி) (குரவோஷிய மொழி) ((செர்பிய மொழி)) (லத்தீன் எழுத்துரு)
конвертибилна марка ((செர்பிய மொழி))(சிரில்லிக் எழுத்துரு)
ISO 4217 குறியீடு BAM
புழங்கும் நாடு(கள்) பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியா எர்செகோவினா
பணவீக்கம் -0.4%
மூலம் The World Factbook, 2009 கணிப்பு
நிலையான மாற்று வீதம் யூரோ (1 யூரோ = 1.95583 கன்வர்ட்டிபிள் மார்க்குகள்)
சிற்றலகு
1/100 ஃபென்னிங்
குறியீடு KM
நாணயங்கள் 5, 10, 20, 50 ஃபெனிங்கா, 1, 2, 5 மராக்கா
வங்கித்தாள்கள் 10, 20, 50, 100, 200 maraka
வழங்குரிமை பொசுனியா எர்செகோவினா மத்திய வங்கி
வலைத்தளம் www.cbbh.ba

கன்வெர்ட்டிபிள் மார்க் (பொஸ்னிய மொழி: konvertibilna marka; ஆங்கிலம்: convertible mark; சின்னம்: KM; குறியீடு: BAM) பொசுனியா எர்செகோவினா (பொஸ்னியா) நாட்டின் நாணயம். 1991 வரை பொஸ்னியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. யுகோஸ்லாவிய உள்நாட்டுப் போர் (பால்கன் உள்நாட்டுப் போர்) தீவிரமாக நடைபெற்ற இடங்களில் பொஸ்னியாவும் ஒன்று. சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட பொஸ்னியா, பொஸ்னியா ஹெர்செகோவினா தினார் நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் 1995ல் டேடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடன், தினாருக்கு பதில் கன்வர்ட்டிபிள் மார்க் பொஸ்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. “மார்க்” என்ற சொல் அப்போது ஜெர்மனியின் நாணயமாக இருந்த டாய்ச்சு மார்க்கின் பெயரிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. கன்வர்ட்டிபிள் என்ற ஆங்கில சொல்லுக்கு ”மாற்றத்தக்க” என்று பொருள். மற்ற நாட்டு நாணயங்களுடன் மாற்ற கூடிய நாணயமாக இது அறிமுகப்படுத்தப் பட்டதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. ஒரு மார்க்கில் 100 ஃபென்னிங்குகள் உள்ளன.