தெற்கு ஆபிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்க மண்டலங்கள்:
  தெற்கத்திய ஆபிரிக்கா (ஐ.நா. உள்வலயம்)
  புவியியல்படி, மேலுள்ளதும் உள்ளிட்டு
  தெற்காப்பிரிக்க வளர்ச்சிக் குமுகாயம் (SADC)

தெற்கு ஆபிரிக்கா (Southern Africa) ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடி மண்டலம் ஆகும். இது பல நாடுகளை உள்ளடக்கி சிலநேரங்களில் புவியியலின்படியும் வேறுசில நேரங்களில் புவியியல்சார் அரசியல் பிரிவுகளின்படியும் வரையறுக்கப்படுகின்றது. தெற்காப்பிரிக்கா அல்லது தெற்கு ஆப்பிரிக்கா, பொதுவாக அங்கோலா, போட்சுவானா, லெசோத்தோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து, சாம்பியா, சிம்பாப்வே நாடுகளை உள்ளடக்கியதாகும். அங்கோலா நடு ஆப்பிரிக்காவிலும் மலாவி, மொசாம்பிக், சாம்பியா, சிம்பாப்வே கிழக்கு ஆபிரிக்காவுடனும் சேர்க்கப்படவும் கூடும். அரசியல் நோக்கில் இந்த மண்டலம் ஒரே முனைவுள்ளதாக கருதலாம்.[1] தென்னாப்பிரிக்கா மண்டலத்தின் முதன்மை அதிகாரம் கொண்டதாக விளங்குகின்றது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

மண்டலத்தின் பெயர்[2] மற்றும்
கொடியுடன் நாட்டின் பெயர்
நாட்டுப் பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(2009 மதிப்பீடு) குறிப்பிட்டுள்ள இடங்களைத் தவிர
மக்களடர்த்தி
(கி.மீ²க்கு)
தலைநகரம்
தெற்கு ஆபிரிக்கா: 2,693,418 56,406,762 20.9
போட்சுவானா போட்சுவானா 600,370 1,990,876 3.3 காபரோனி
லெசோத்தோ லெசோத்தோ 30,355 2,130,819 70.2 மசேரு
நமீபியா நமீபியா 825,418 2,108,665 2.6 விந்தோக்
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 1,219,912 49,052,489 40.2 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[3]
சுவாசிலாந்து சுவாசிலாந்து 17,363 1,123,913 64.7 இம்பபான்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Schenoni, Luis (2017) Subsystemic Unipolarities, Power Distribution and State Behaviour in South America and Southern Africa, in Strategic Analysis 41 (1) 74-86".
  2. ஐ.நா. வகைப்படுத்தல்/நிலப்படம்.
  3. தென்னாப்பிரிக்காவின் நீதித்துறையின் தலைநகரமாக புளும்பொன்டினும், சட்டமன்றத் தலைநகரமாக கேப் டவுனும் மற்றும் நிர்வாகத் தலைநகரமாக பிரிடோரியாவும் விளங்குகின்றன.

மேலும் அறிய[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஆபிரிக்கா&oldid=2544285" இலிருந்து மீள்விக்கப்பட்டது