உள்ளடக்கத்துக்குச் செல்

ரெடாங் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 05°45′55″N 103°00′25″E / 5.76528°N 103.00694°E / 5.76528; 103.00694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெடாங்
வானூர்தி நிலையம்
Redang Airport
 • ஐஏடிஏ: RDN
 • ஐசிஏஓ: WMPR
  Redang Airport is located in மலேசியா
  Redang Airport
  Redang Airport
  ரெடாங் வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய அரசாங்கம் (Government of Malaysia)
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Berhad)
சேவை புரிவதுரெடாங் தீவு, மலேசியா
அமைவிடம்கோலா நெருசு, ரெடாங் தீவு,திராங்கானு, மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL25 ft / 8 m
ஆள்கூறுகள்05°45′55″N 103°00′25″E / 5.76528°N 103.00694°E / 5.76528; 103.00694
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 940 3,084 தார்; சிமெண்டு கலவை
(Asphalt Concrete)
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள் போக்குவரத்து5159 ()
சரக்கு (டன்கள்)0 ()
வானூர்தி போக்குவரத்து39 ( 5550%)
Source : Aeronautical Information Publication Malaysia[1] GDM[2]

ரெடாங் வானூர்தி நிலையம் அல்லது ரெடாங் தீவு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: RDNஐசிஏஓ: WMPR); (ஆங்கிலம்: Redang Airport அல்லது Redang Island Airport; மலாய்: Lapangan Terbang Redang) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District), ரெடாங் தீவில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.

இதன் ஓடுபாதையின் மேற்குப் பகுதி ஒரு நீண்ட மலையின் அடிவாரத்தில் உள்ளது. மற்றொரு மலை முகடு 1 கிலோமீட்டர் (0.6 மைல்) கிழக்கே இணையாகச் செல்கிறது. ஆகவே இந்த ஓடுபாதையை தெற்கில் இருந்துதான் அணுக முடியும். அதனால் வானூர்திகள் தண்ணீருக்கு மேல் பறந்து தரை இறங்குகின்றன.[3]

பொது[தொகு]

தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ரெடாங் தீவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, அதன் விரிவாக்கத்திற்காக 2009-இல் சிறிது காலத்திற்கு மூடப்பட்டது. ஏப்ரல் 16, 2009-இல் மீண்டும் திறக்கப்பட்டது.

மேலும் இந்த ரெடாங் தீவு உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. திராங்கானு மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் இந்தத் தீவு 7 கி.மீ. நீளமும் 6 கி.மீ. அகலமும் கொண்டது.[4]

ரெடாங் தீவுக் கூட்டம்[தொகு]

ரெடாங் தீவில் ஓர் உயரமான குன்று உள்ளது. அதன் பெயர் புக்கிட் பெசார் (Bukit Besar). கடல் மட்டத்தில் இருந்து 359 மீ. உயரத்தில் உள்ளது. ரெடாங் தீவுக் கூட்டம் மலேசியக் கடல் பூங்காக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு பாதுகாக்கப் படுகிறது (Gazetted and Protected as Marine Parks of Malaysia).

தற்போது, ரெடாங் தீவு, லாங் தெங்கா தீவு (Lang Tengah Island), பெர்கெந்தியான் தீவு (Perhentian Island) மற்றும் கபாசு தீவு (Kapas Island) ஆகிய பெரிய தீவுகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கான தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

ரெடாங் கடல் பூங்கா[தொகு]

கடல் ஆமைகள் முட்டையிடுவதற்கான தளமாகவும் இந்தத் தீவு விளங்குகிறது. மேலும் ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதி மென்மையான வெள்ளை மணலால் மூடப்பட்டு இருக்கும். கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பவளப் பாறைகளையும் மீன்களையும் தெளிவாகப் பார்க்கலாம்.

ரெடாங் கடல் பூங்கா நிர்வாக மன்றம் (Pulau Redang Marine Parks) எனும் ஒரு பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றம், சுற்றுலாப் பயணிகளின் தவறான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதில் முதன்மை காட்டுகிறது. கழிவுப் பொருட்களைக் கட்டுப் படுத்துதல்; பவளப் பாறைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்றவை அந்த மன்றத்தின் முக்கிய இலக்குகளாக அமைகின்றன.

வானூர்தி சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
பெர்சாயா ஏர் முன்பதிவு: கோலாலம்பூர்–சுபாங், சிங்கப்பூர்–செலத்தார்

[5]

எசுகேசு வானூர்தி நிறுவனம் கோலாலம்பூர்–சுபாங்[6]

உள்நாட்டு சேவைகள்[தொகு]

ஆண்டுவாரியாக விமானசேவைகளினதும் பயணிகளதும் புள்ளிவிபரங்கள்
ஆண்டு
பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2004 20,750 0 741
2005 30,650 47.7 0 1,121 51.3
2006 28,928 5.6 0 934 16.7
2007 33,738 16.6 0 1,053 12.7
2008 34,957 3.6 0 1,083 2.8
2009 28,246 19.2 0 862 20.4
2010 48,610 72.1 0 1,356 57.3
2011 46,159 5.0 0 1,319 2.7
2012 35,960 22.1 27 877 33.5
2013 35,982 0.1 27 955 8.9
2014 11,087 69.2 17 37.7 430 55.0
2015 0 0 0
2016 0 0 0
2017 0 0 0
2018 51 0 6
2019 0 0 6
2020 5159 0 39 5550
Source: Malaysia Airports Holdings Berhad[7]

வானூர்தி பயணங்கள்[தொகு]

அதிக அளவிலான பயணங்கள்
தரவரிசை இலக்குகள் நிகழ்வுகள் (வாரம்)
1 சிலாங்கூர், சுபாங் (SZB) 5
2  சிங்கப்பூர் 3

சான்றுகள்[தொகு]

 1. AIP Malaysia: WMPR - Pulau Redang பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
 2. Airport information for Redang Airport at Great Circle Mapper.
 3. "Redang Airport". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
 4. "Redang Island, Malaysia, offers some of the best diving and snorkelling in this part of the world with its rich marine life, sandy beaches and clear waters. Pulau Redang is one of the largest islands off the east coast of Malaysia. It is a popular holiday island for Malaysians". www.pulauredang.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
 5. "Berjaya Air connects Singapore, Redang with new service; TTG Asia". TTG Asia. 18 April 2022.
 6. https://booking.sksairways.com/
 7. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). Malaysia Airports. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடாங்_வானூர்தி_நிலையம்&oldid=3656645" இலிருந்து மீள்விக்கப்பட்டது