உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டர்வொர்த் இராணுவ வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டர்வொர்த் இராணுவ
வானூர்தி நிலையம்
RMAF Butterworth
அரச மலேசிய விமானப் படையின்
நவீன விமானம்
  • ஐஏடிஏ: BWH
  • ஐசிஏஓ: WMKB
    WMKB is located in மலேசியா
    WMKB
    WMKB
    பட்டர்வொர்த் இராணுவ
    வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
உரிமையாளர்மலேசிய தற்காப்பு துறை அமைச்சு
இயக்குனர்அரச மலேசிய விமானப் படை
அமைவிடம்பட்டர்வொர்த்
பினாங்கு
மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL56 ft / 17 m
ஆள்கூறுகள்05°27′58″N 100°23′28″E / 5.46611°N 100.39111°E / 5.46611; 100.39111
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18/36 2,438 7,999 கருங்காரை
Sources: Aeronautical Information Publication Malaysia[1]

பட்டர்வொர்த் இராணுவ வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: RMAF Butterworth (RMAF - Royal Malaysian Air Force) மலாய்: TUDM Butterworth (TUDM - Tentera Udara Diraja Malaysia); என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த் நகரில் உள்ள அரச மலேசிய விமானப் படையின் இராணுவ வானூர்தி நிலையம் ஆகும். பட்டர்வொர்த் நகரில் இருந்து 4.5 கடல் மைல்கள் (8.3 km; 5.2 mi) தொலைவில் உள்ளது.

1940-ஆம் ஆண்டுகளில், ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப் படை (Royal Air Force); மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில், அரச ஆசுதிரேலியா விமானப் படை (Royal Australian Air Force); ஆகியவற்றின் செயல்பாட்டுக் கட்டளைகளின் கீழ், இந்த விமான நிலையம் இயங்கியது.[2]

பொது

[தொகு]

முதலில் பட்டர்வொர்த் அரச விமான நிலையம் (RAF Station Butterworth) என்றும்; பின்னர் பட்டர்வொர்த் அரச ஆசுதிரேலியா விமான நிலையம் (RAAF Butterworth) என்றும் அறியப்பட்டது. இப்போது இந்த வானூர்தி நிலையம் அரச மலேசிய விமானப் படையின் இராணுவத் தளமாக உள்ளது.[3]

1939-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப் படையினால், பட்டர்வொர்த்தில் ஒரு விமான நிலையம், "கவனிப்பு மற்றும் பராமரிப்பு" அடிப்படையில் நிறுவப்பட்டது.

மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு

[தொகு]

அக்டோபர் 1941-இல், ஜப்பானிய படைகளின் படையெடுப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக; மலாயா தீபகற்பத்தை பாதுகாப்பதற்கான ஐக்கிய இராச்சியத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக பட்டர்வொர்த் இராணுவ வானூர்தி நிலையம் அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது.[4]

டிசம்பர் 1941-இல் ஜப்பானியரின் மலாயா மீதான படையெடுப்பின் போது, இந்த விமான நிலையம் ஜப்பானிய கடற்படை விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் சேதம் அடைந்தது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. AIP Malaysia: WMKB - Butterworth at Department of Civil Aviation Malaysia
  2. "Defence FOI 151/18/19 Item Serial 1" (PDF). Department of Defence (Australia). Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "RMAF Base Butterworth". Royal Australian Air Force. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.
  4. 4.0 4.1 Hugh Crowther (2014). "RAF Station Butterworth Malaya (1939-1957)" (PDF). Air Force Association NSW. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.

மேலும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]