உள்ளடக்கத்துக்குச் செல்

பயர்பிளை வானூர்திச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயர்பிளை
IATA ICAO அழைப்புக் குறியீடு
FY FFM FIREFLY
நிறுவல்2007
மையங்கள்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்செனைய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்என்ரிச்
வானூர்தி எண்ணிக்கை19
சேரிடங்கள்19
தாய் நிறுவனம்மலேசியா எயர்லைன்சு
தலைமையிடம்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
சுபாங், சிலாங்கூர், மலேசியா
முக்கிய நபர்கள்இக்னேசியசு ஓங்
வலைத்தளம்www.fireflyz.com.my
மலேசியா எயர்லைன்சு வளாகம் யில் பயர்பிளை தலைமையகம் இயங்குகின்றது

பயர்பிளை நிறுவனம் (FlyFirefly Sdn Bhd) சுருக்கமாக பயர்பிளை, இரு இடங்களுக்கிடையே நேரடியாக இயக்கப்படும் முழுச்சேவை வழங்கும் வானூர்திச் சேவை நிறுவனமாகும்; இது மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சிலாங்கூரிலுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தின் தரைப்பகுதியிலிருந்து இதன் தலைமையகம் இயங்குகின்றது.[1]மலேசியாவின் முதல் சமூக வான்சேவை நிறுவனம் என அறியப்படுகின்றது. பயர்பிளை இரண்டு அச்சுமையங்களிலிருந்து தனது சேவைகளை இயக்குகின்றது: சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம், சிலாங்கூர் மற்றும் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம். இதன் முதல் சேவை ஏப்ரல் 3, 2007இல் பினாங்கிலிருந்து கோட்டா பரூவிற்கு துவங்கியது.

மேலாண்மையும் இயக்கமும்

[தொகு]

தனது தாய் நிறுவனமான மலேசியா எயர்லைன்சு தவிர்த்த தனியான மேலாண்மை பயர்பிளைக்கு உள்ளது. இது மலேசியா தவிர இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் தனது சேவைகளை குவியப்படுத்தி உள்ளது.

மார்ச் 16, 2007இல் புதிய சேவை நிறுவனமாக பயர்பிளையை அறிமுகப்படுத்தும் விழாவில் மலேசியா எயர்லைன்சின் முதன்மை செயல் அலுவலர் இத்ரிசு ஜாலா இப்புதிய நிறுவனம் மலேசிய எயர்லைன்சுடன் இணைந்து புதிய பாதைகளை வகுக்கும் என்றும் அடுத்த ஐந்தாண்டுகளில் தனது கருவ சேவைகளை உருவாக்கும் எனவும் கூறினார். இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தென்னாபிரிக்கா நாடுகளுக்கு இயக்குவதும் இதன் நோக்கமாக அமையும் என்றார்.[2]

சேருமிடங்கள்

[தொகு]
பயர்பிளை பறக்குமிடங்களின் நிலப்படம் - சூலை 2010 நிலவரம்
லங்காவி வானூர்தி நிலையத்தில் பயர்பிளை ATR 72-500 வானூர்தி

பயர்பிளை இரண்டு அச்சு மையங்களிலிருந்து, பினாங்கு மற்றும் கோலாலம்பூரின் சுபாங், தனது சேவைகளை இயக்குகின்றது. பினாங்கிலிருந்து உள்நாட்டுச் சேவைகளாக லங்காவி, கோட்டா பாரு, சுபாங், குவாலா திரங்கானு, குவாந்தான் நகரங்களுக்கு நாளுக்கு இருமுறை இயக்குகின்றது; தவிர கோ சமுயய், தாய்லாந்தின் பூகத்திற்கு நாளுக்கொருமுறை சேவை வழங்குகின்றது. சுபாங்கிலிருந்து பினாங்கு, லங்காவி, அலோர் செடார், ஜொகூர் பாரு, குவாலா திரங்கானு, கொத்தா பாரு, சிங்கப்பூர், தாய்லாந்தின் கோ சமுயய் மற்றும் இந்தோனேசியாவின் பெக்கான்பாருவிற்கும் சேவைகளை வழங்குகின்றது. இருப்பினும் பினாங்கிலிருந்து குவாலா திரங்கானு, கொத்தா பாரு, கோ சமுயய், குவாந்தான் நகரங்களுக்கு தனது சேவைகளை இடைநிறுத்தம் செய்வதாக மார்ச் 8, 2009இல் அறிவித்தது.[3] 2011இலிருந்து இச்சேவைகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.[4]

மலேசியா
இந்தோனேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Contact Info." Firefly. Retrieved on 22 February 2010. "Principal Office FlyFirefly Sdn Bhd, 3rd Floor, Admin Building 1, Complex A, Sultan Abdul Aziz Shah Airport, 47200 Subang, Selangor, Malaysia. "
  2. Firefly to help MAS boost revenue
  3. "Firefly suspends some flights from Penang", "Business Times", 9 March 2009
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Karim, F.N., "Firefly to start services April 2", Business Times, 15 March 2006
  • Yeow, J. & Francis, I., "MAS to launch Firefly", The Sun, 15 March 2006