சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம்
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கோத்தா பாரு, கிளாந்தான் மற்றும் பெசுட், திராங்கானு | ||||||||||
அமைவிடம் | பெங்காலான் செப்பா, கிளாந்தான்,, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 16 ft / 5 m | ||||||||||
ஆள்கூறுகள் | 6°10′02″N 102°17′32″E / 6.1672560°N 102.2922092°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KBR, ஐசிஏஓ: WMKC); (ஆங்கிலம்: Sultan Ismail Petra Airport அல்லது Kota Bharu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Ismail Petra) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் கோத்தா பாரு மாநகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
இந்த வானூர்தி நிலையம், கோத்தா பாரு, கிளாந்தான், திராங்கானு மாநிலத்தின் பெசுட் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் (Ismail Petra of Kelantan) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.
பொது
[தொகு]சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தின் தற்போதைய புதிய முனையம் செப்டம்பர் 2002-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் 12,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அதிகப் பட்சமாக 1.45 மில்லியன் பயணிகளைக் கையாள்வதற்கு ஆற்றல் கொண்டது.
விமான நிலையம் 9 பயணிகள் பதிவுச் சாவடிகளை (check-in counters) கொண்டுள்ளது. மலேசியா எயர்லைன்சு, ஏர்ஏசியா, பயர்பிளை மற்றும் மலின்டோ ஏர் ஆகியவற்றின் 7 உள்நாட்டு இடங்களுக்கு இடையிலான விமானச் சேவைகளை வழங்குகிறது. கிழக்கு கடற்கரையில் மிகவும் பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் கருதப் படுகிறது.
வரலாறு
[தொகு]இந்த வானூர்தி நிலையம் முன்னாள் பிரித்தானிய இராணுவத்தின் வானூர்தி நிலையமாகும். இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீதான ஜப்பானியர் படையெடுப்பில் இந்த நிலையம் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1941-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, மலாயாவில் முதல் ஜப்பானிய வானூர்தியின் தரையிறக்கம் இந்த நிலையத்தில் தான் நடைபெற்றது. போருக்குப் பிறகு, பொதுமக்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டது. பயணிகள் முனையம் கட்டப்பட்டது. பின்னர் பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது.
புதிய முனையம்
[தொகு]நிலையத்தின் முனையம் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா வானூர்தி நிலையம் என்று அறிவிக்கப்பட்டது.
1999-இல், சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் ஒரு புதிய முனையக் கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்தத் திட்டம் செப்டம்பர் 2000-இல் தொடங்கப்பட்டு ஜூன் 2002-இல் நிறைவடைந்தது. மொத்த செலவு 55 மில்லியன் ரிங்கிட்.
ஓடுபாதை விரிவாக்கம்
[தொகு]அக்டோபர் 2008-இல், ஓடுபாதையை 2,400 மீ (7,874 அடி) நீளத்திற்கு நீட்டிக்க இருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அந்தத் திட்டம் 14 ஜூன் 2010-இல் தொடங்கியது.
நிலையத்தின் பழைய ஓடுபாதை 1,981 மீட்டரில் இருந்து 2,400 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது. போயிங் 737-800 மற்றும் ஏர்பஸ் ஏ 320 ரக வானூர்திகள் தரை இறங்கும் அளவிற்கு ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஏர்ஏசியா ஒப்பந்தம்
[தொகு]பிப்ரவரி 2013-இல், ஏர்ஏசியா மற்றும் பயர்பிளை ஆகிய நிறுவனங்கள்; சுல்தான் இசுமாயில் பெட்ரா விமான நிலையத்தை தங்களின் இரண்டாம் நிலை மையமாக மாற்றும் ஒப்பந்தத்தில் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனத்துடன் கையெழுத்திட்டன.
அக்டோபர் 2017-இல், விமான நிலையத்தின் முனையங்களை மேம்படுத்த மலேசிய மத்திய அரசு ரிங்கிட் 450 மில்லியன் தொகையை வழங்கியது.
வானூர்திச் சேவைகள்
[தொகு]சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஜொகூர் பாரு); கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்); கோத்தா கினாபாலு; கூச்சிங்; லங்காவி; பினாங்கு |
பயர்பிளை | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்); பினாங்கு |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்) |
மலின்டோ ஏர் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்); லங்காவி; |
உள்நாட்டுச் சேவைகள்
[தொகு]ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 589,950 | 315 | 10,010 | |||
2004 | 639,871 | 8.5 | 235 | ▼25.4 | 11,869 | 18.6 |
2005 | 635,397 | ▼0.7 | 168 | ▼28.5 | 11, 194 | ▼ 5.7 |
2006 | 678,306 | 6.7 | 210 | 25.0 | 38,352 | 242.6 |
2007 | 759,316 | 12.0 | 163 | ▼22.4 | 58,996 | 53.8 |
2008 | 836,060 | 10.1 | 181 | 11.0 | 57,102 | ▼ 3.2 |
2009 | 1,003,162 | 20.0 | 185 | 2.2 | 74,863 | 31.1 |
2010 | 1,047,755 | 4.4 | 177 | ▼4.3 | 75,906 | 1.4 |
2011 | 1,132,345 | 8.1 | 164 | ▼7.3 | 64,114 | ▼ 15.5 |
2012 | 1,259,205 | 11.2 | 147 | ▼10.4 | 50,991 | ▼ 20.5 |
2013 | 1,585,238 | 25.9 | 179 | 21.8 | 50,406 | ▼ 1.1 |
2014 | 1,800,836 | 13.6 | 397 | 121.6 | 44,628 | ▼ 11.5 |
2015 | 2,063,747 | 14.6 | 1,003 | 152.5 | 42,810 | ▼ 4.1 |
2016 | 2,062,248 | ▼ 0.1 | 780 | ▼ 22.2 | 31,956 | ▼ 25.4 |
2017 | 1,988,212 | ▼ 3.6 | 775 | ▼ 0.7 | 30,433 | ▼ 4.8 |
2018 | 1,688,625 | ▼ 15.1 | 1,073 | 38.4 | 24,481 | ▼ 19.6 |
2019 | 1,823,089 | 8.0 | 1,250 | 16.6 | 25,383 | 3.7 |
2020 | 711,480 | ▼ 61.0 | 545 | ▼ 56.4 | 13,460 | ▼ 47.0 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[3] |
இலக்குகள்
[தொகு]தரவரிசை | இலக்குகள் | பயணங்கள் (வாரம்) | வானூர்தி நிறுவனங்கள் | Note |
---|---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சுபாங், சிலாங்கூர் | 72 | FY, OD | |
2 | கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் | 51 | AK, MH | |
3 | பினாங்கு, பினாங்கு | 5 | AK, FY | |
4 | லங்காவி, கெடா | 8 | AK, OD | |
5 | ஜொகூர் பாரு, ஜொகூர் | 3 | AK | |
6 | கோத்தா கினபாலு, சபா | 4 | AK | |
7 | கூச்சிங், சரவாக் | 1 | AK |
வானூர்தி நிலையக் காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AIP Supplement Malaysia" (PDF). Department of Civil Aviation Malaysia. 14 July 2011. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sultan Ismail Petra Airport, Kota Bharu at Malaysia Airports Holdings Berhad
- ↑ "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)