இலாவாசு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 04°50′57″N 115°24′10″E / 4.84917°N 115.40278°E / 4.84917; 115.40278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாவாஸ் வானூர்தி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலாவாசு வானூர்தி நிலையம்
Lawas Airport
சரவாக்


டுவின் ஒட்டர் வானூர்தி

IATA: LWYICAO: WBGW
LWY WBGW is located in மலேசியா
LWY WBGW
LWY WBGW
இலாவாசு வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவது லாவாசு
உயரம் AMSL 10 அடி / 3.048 மீ
ஆள்கூறுகள் 04°50′57″N 115°24′10″E / 4.84917°N 115.40278°E / 4.84917; 115.40278
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
01/19 686 தார் (Bitumen)
புள்ளிவிவரங்கள்
பயணிகள்
சரக்கு (டன்கள்)
விமான நகர்வுகள்
Sources: official web site[1]
Aeronautical Information Publication Malaysia[2]

இலாவாசு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LWYஐசிஏஓ: WBGW); (ஆங்கிலம்: Lawas Airport; மலாய்: Lapangan Terbang Lawas) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் இலிம்பாங் பிரிவு, இலாவாசு நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[3]

இந்த வானூர்தி நிலையம் இலாவாசு நகரம்; இலாவாசு மாவட்டம்; இலிம்பாங் பிரிவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானூர்திப் போக்குவரத்தை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

பொது[தொகு]

சரவாக் மாநிலத் தலைநகரான கூச்சிங்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த வானூர்தி நிலையம் உள்ளது. சரவாக், சபா மற்றும் புரூணை நிலப் பகுதிகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் ஒரு சிறப்பான போக்குவரத்து மையமாகவும் திகழ்கின்றது.

தற்போது உள்ள வானூர்தி நிலையத்தைப் புதிய இடத்திற்கு மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தளம் பாதுகாப்பற்றதாகக் கருதப் படுகிறது. வானூர்தி நிலையம் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையில் சில நில அரிப்புகள் காணப்பட்டன.

இந்தப் புதிய விமான நிலையம், மாஸ் விங்சு மூலம் இயக்கப்படும் ATR 72-500 ரக விமானங்கள் பயன்படுத்த இடமளிக்கும். புதிய விமான நிலையத்தை இலாவாசில் உள்ள மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சரவாக் சபா எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்துவார்கள்.

லாவாசு நகரம்[தொகு]

காடுகளில் உள்ள காட்டு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வதும்; விவசாயமும் தான், இந்த நகரின் முக்கியமான பொருளாதார ஆதாரங்கள். பாகெலாலான் (Ba'Kelalan) எனப்படும், இலாவாசு மேட்டு நிலப் பகுதிகளில் ஆப்பிள் சாகுபடி பரிசோதனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆப்பிள் அறுவடை செய்கிறார்கள்.

இலாவாசு நகரத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மாநில அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளன.

இலாவாசு பகுதியில் நெல் சாகுபடி நிலத்தின் பெரும்பகுதி செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

சேவை[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் சிவிங்சு
(MASwings)
பாகெலாலான் வானூர்தி நிலையம்
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
லிம்பாங் வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம்

சம்பவங்கள் மற்றும் விபத்துகள்[தொகு]

  • 2011 ஆகஸ்ட் 24-ஆம் தேதி, ஒரு மாஸ் விங்ஸ் வானூர்தி (Twin Otter DHC6) தரையிறங்கும் போது அதன் முன் சக்கரம் உடைந்தது. இந்தச் சம்பவத்தில் 16 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் காயமின்றி தப்பினர்.[4]

வானூர்திப் பயண எண் 3516 கொண்ட அந்த வானூர்தி மிரியில் இருந்து லாவாஸுக்கு உள்நாட்டுச் சேவையில் ஈடுபட்டு இருந்தது. ஓடுபாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையின் வலதுபுறம் திரும்பி அதன் மூக்குச் சக்கரம் உடைந்தது.[5]

லாவாசு வானூர்தி நிலையத்தின் உட்பகுதி[தொகு]

லாவாஸ் வானூர்தி நிலையத்தின் உட்பகுதி

காட்சியகம்[தொகு]

இலாவாசு வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Lahad Datu Airport, Sabah at Malaysia Airports Holdings Berhad
  2. WBG - LAHAD DATU at Department of Civil Aviation Malaysia
  3. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  4. "18 survive crash-landing in Lawas". The Borneo Post. 25 August 2011. http://www.theborneopost.com/2011/08/25/18-survive-crash-landing-in-lawas/. பார்த்த நாள்: 3 July 2017. 
  5. Ranter, Harro. "ASN Aircraft accident de Havilland Canada DHC-6 Twin Otter 310 9M-MDM Lawas Airport (LWY) - The airplane operated Flight 3516, a domestic service from Miri (MYY) to Lawas (LWY). On landing on runway 19 the Twin Otter veered right off the runway, collapsing the nose gear". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 11 June 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lawas Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]