உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கா வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 02°52′55″N 112°02′36″E / 2.88194°N 112.04333°E / 2.88194; 112.04333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கா வானூர்தி நிலையம்
Mukah Airport

முக்கா விமான நிலையம்
 • ஐஏடிஏ: MKM
 • ஐசிஏஓ: WBGK
  Mukah Airport is located in மலேசியா
  Mukah Airport
  Mukah Airport
  முக்கா வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
(Government of Malaysia)
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
(Malaysia Airports Berhad)
சேவை புரிவதுமுக்கா, முக்கா பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா)
அமைவிடம்முக்கா; சரவாக்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL19.685 ft / 6 m
ஆள்கூறுகள்02°52′55″N 112°02′36″E / 2.88194°N 112.04333°E / 2.88194; 112.04333
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
15/33 1,500 4,921 தார்
புள்ளிவிவரங்கள் (2021)
பயணிகள்
போக்குவரத்து
17,387 ( 40.1%)
சரக்கு டன்கள்1,694 ( 46.2%)

முக்கா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MKM[1]ஐசிஏஓ: WBGK); (ஆங்கிலம்: Mukah Airport; மலாய்: Lapangan Terbang Mukah) என்பது மலேசியா, சரவாக், முக்கா நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் முக்கா பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு வானூர்திச் சேவைகளை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

வரலாறு[தொகு]

பழைய வானூர்தி நிலையம்[தொகு]

பழைய சிறு தொலைவு வானூர்தி நிலையம் (Short Take-Off and Landing - STOL) 1960-களில் திறக்கப்பட்டது அப்போது அந்த நிலையம் ஒரே நேரத்தில் 67 பயணிகளை மட்டுமே கையாள முடிந்தது.[3][4] அதன் ஓடுபாதை 1,097 மீட்டர் நீளம் கொண்டு இருந்தது. 2020-இல், 29,011 பயணிகளையும் 3,150 விமான இயக்கங்களையும் கையாண்டது.

பழைய நிலையத்தில் அதன் கடைசி நாளான 16 ஜூன் 2021-இல் மிரிக்கு மதியம் 1.20 மணிக்கு புறப்பட்ட வானூர்திச் சேவையுடன் அதன் இயக்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

புதிய வானூர்தி நிலையம்[தொகு]

ஏப்ரல் 2009-இல், மலேசிய மத்திய அரசாங்கம் முக்காவில் ஒரு புதிய வானூர்தி நிலைய கட்டுமானத்திற்கு RM 436 மில்லியன் ஒதுக்கியது. கட்டுமானப் பணிகள் 2017-ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கப்பட்டன.[5]

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, வானூர்தி நிலையத்தின் கட்டுமானச் செலவுத் தொகை RM 360 மில்லியன் என்று துணை சரவாக் முதல்வர் ஜேம்சு செமுட் மாசிங் (James Jemut Masing) அறிவித்தார். புதிய முக்கா வானூர்தி நிலையம் 17 ஜூன் 2021-ஆம் தேதி தன் செயல்பாட்டைத் தொடங்கியது.[6]

360 மில்லியன் மலேசிய ரிங்கிட்[தொகு]

RM 360 மில்லியன் செலவிலான புதிய முக்கா வானூர்தி நிலையம் முக்கா நகரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் 285 ஏக்கர் (115 எக்டர்) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. புதிய வானூர்தி நிலையம் 3,120 m2 (33,600 sq ft) கொண்ட வானூர்தி முனையக் கட்டடத்தைக் கொண்டது.[7]

தவிர ஓடுபாதை, போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் (Air Traffic Control Tower), அலுவலகங்கள், முக்கிய நபர்கள் கட்டடம் (VIP Building), தீயணைப்பு நிலையம் மற்றும் பயணிகள் காத்திருக்கும் கூடம் போன்ற வசதிகளைக் கொண்டு உள்ளது.

இந்தப் புதிய முக்கா வானூர்தி நிலையத்தில் 100 வாகனங்கள் நிறுத்துமிடங்கள், 20 வாடகை வாகனங்கள் நிறுத்துமிடங்கள், 20 உந்துருளிகள் நிறுத்துமிடங்கள், மற்றும் 2 பேருந்துகள் நிறுத்துமிடங்கள் உள்ளன. புதிய வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 264,000 பயணிகள் வரை கையாளும். மற்றும் தேவைப்பட்டால் பெரிய விமானங்கள் இறங்குவதற்கான நவீனத் தொழில்நுடப வசதிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.[8]

வானூர்திச் சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
மலேசியா எயர்லைன்சு
நடத்துனர்: மாஸ் சுவிங்சு
பிந்துலு, கூச்சிங், மிரி, சிபு, தஞ்சோங் மானிசு

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்[தொகு]

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்[9][10]
ஆண்டு பயணிகள் வானூர்தி இயக்கங்கள்
2004
30,377
2,772
2005
31,807
2,846
2006
25,874
2,896
2007
20,908
2,378
2008
28,875
2,608
2009
34,979
2,932
2010
38,810
3,152
2011
37,450
3,258
2012
36,323
3,080
2013
34,247
2,996
2014
37,968
3,370
2015
35,935
3,258
2016
36,182
4,467
2017
37,148
4,234
2018
40,919
4,360
2019
47,557
4,318
2020
29,011
3,150
2021
17,387
1,694

மேற்கோள்கள்[தொகு]

 1. Airport information for MKM at Great Circle Mapper.
 2. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
 3. "New Mukah Airport Opens, Replacing Previous Mukah Stolport". Malaysia Airports Berhad. 17 June 2021. http://www.malaysiaairports.com.my/media-centre/news/new-mukah-airport-opens-replacing-previous-mukah-stolport. பார்த்த நாள்: 28 June 2021. 
 4. John Isaac (16 June 2021). "Stolport Mukah ceases operations after more than 50 years". The New Sarawak இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210617020220/https://thenewsarawak.com/stolport-mukah-ceases-operations-after-more-than-50-years/. பார்த்த நாள்: 28 June 2021. 
 5. [1] at Malaysia Airports Holdings Berhad
 6. "Works on Mukah's new RM360-million airport set for completion by January 2021". The Borneo Post. 9 August 2020. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
 7. "SNew Mukah Airport begins operations (VIDEO)". Malay Mail. 17 June 2021. https://www.malaymail.com/news/malaysia/2021/06/17/new-mukah-airport-begins-operations-video/1982990. பார்த்த நாள்: 28 June 2021. 
 8. "DISCOVER THE FIRST FULLY LED MONITORED AIRPORT IN MALASYIA: MUKAH AIRPORT". OCEM Airfield Technology. https://ocem.com/en/discover-the-first-fully-led-monitored-airport-in-malasyia-mukah-airport/. பார்த்த நாள்: 29 June 2021. 
 9. "Mukah STOLport" (PDF). Malaysia Airports Berhad. 10 May 2016. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. "Data Sektor Udara Q1 - Q4 2021 - MOT". Ministry of Transport. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கா_வானூர்தி_நிலையம்&oldid=3931329" இலிருந்து மீள்விக்கப்பட்டது