குளுவாங் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 02°02′38″N 103°18′27″E / 2.04389°N 103.30750°E / 2.04389; 103.30750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுவாங்
வானூர்தி நிலையம்
Kluang Airport
குளுவாங் நகரத்தின் பின்புறத்தில்
குளுவாங் வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: இல்லை
  • ஐசிஏஓ: WMAP
    WMAP is located in மலேசியா
    WMAP
    WMAP
    குளுவாங் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
உரிமையாளர்மலேசிய இராணுவப்படை
இயக்குனர்மலேசிய இராணுவ விமான போக்குவரத்து
அமைவிடம்குளுவாங்
ஜொகூர்
மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL142 ft / 43 m
ஆள்கூறுகள்02°02′38″N 103°18′27″E / 2.04389°N 103.30750°E / 2.04389; 103.30750
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,250 4,101 புல்தரை
Sources: Aeronautical Information Publication Malaysia[1]

குளுவாங் வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMAP) (ஆங்கிலம்: Kluang Airport மலாய்: Lapangan Terbang Kluang) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், குளுவாங் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையத்தை கேம் மக்கோத்தா (Kem Mahkota) என்றும் அழைப்பது உண்டு.[2]

தற்போது, ​​குளுவாங் வானூர்தி நிலையத்தில் ஒரு முனையம் (Terminal) மட்டுமே உள்ளது. இந்த நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் இல்லை. திட்டமிடப்பட்ட விமானச் சேவைகள் இல்லாததால், குளுவாங் வானூர்தி நிலையத்திற்குச் செல்லும் போது பயணிகள் தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்கள்.[3]

பொது[தொகு]

இந்த வானூர்தி நிலையம் குளுவாங் நகர மையத்தில் இருந்து வடமேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது மலேசிய இராணுவத்தின் 881-ஆவது விமானப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

வரலாறு[தொகு]

1940-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயா இராணுவத்திரால் இந்த வானூர்தி நிலையம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களிடம் வீழ்ந்த பிரித்தானிய மலாயாவின் கடைசி வானூர்தி நிலையம் இதுவாகும்.

சிங்கப்பூரில் இருந்து சுமத்திரா வரையிலான வான்வழித் தாக்குதல்களுக்கு ஜப்பானியப் படைகளால் இந்த வானூர்தி நிலையம் பயன்படுத்தப்பட்டது. 1995-ஆம் ஆண்டில் மலேசிய விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து மலேசிய இராணுவ விமானப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. AIP Malaysia: WMAP - Kluang at Department of Civil Aviation Malaysia
  2. "Kluang Airport is an airport located in Kluang City, in the state of Johor, Malaysia. It is a military airport operated by the Malaysian Army Airwing. The location indicator of Kluang airport is WMAP. The altitude of the airport is 150 feet or 46 meters above sea level". Flight Malaysia. Malaysia Flight Schedules (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2023.
  3. "Information about Kluang Airport - World airport database". www.airport-data.com.

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]