நீளவீடு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீளவீடு (Longhouse) எனப்படுவது, ஒரு அறை கொண்ட, நீளமானதும் ஒடுங்கியதுமான அளவு விகிதமுடையதுமான ஒரு வகை வீடு ஆகும். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் குழுக்கள் பல இவ்வகையான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவற்றுட் பல மரத்தால் கட்டப்பட்டவை. பெரும்பாலான பண்பாடுகளில் இவை நிரந்தர அமைப்புக்களின் தொடக்ககால வடிவங்களாகக் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் புதியகற்கால நீளவீடுகள், கால்நடைகள் வளர்ப்பதற்கும் பயன்பட்ட மத்தியகால தாட்மூர் நீளவீடுகள், அமெரிக்காக்களின் தாயக மக்களுள் பல பண்பாட்டினர் பயன்படுத்திய பல விதமான நீளவீடுகள் என்பன இவ்வீடு வகையுள் அடங்குவன.
ஐரோப்பா[தொகு]
புதியகற்கால நீளவீட்டு வகையை கிமு 5000 ஆண்டுக் காலப்பகுதியில் நடு, மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த முதல் வேளாண்மைச் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர்.