உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிர் மாஸ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°2′N 102°8′E / 6.033°N 102.133°E / 6.033; 102.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாசீர் மாஸ் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாசிர் மாஸ் மாவட்டம் Pasir Mas District
Jajahan Pasir Mas
கிளாந்தான்
Map
பாசிர் மாஸ் மாவட்டம் is located in மலேசியா
பாசிர் மாஸ் மாவட்டம்
      பாசீர் மாஸ் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°2′N 102°8′E / 6.033°N 102.133°E / 6.033; 102.133
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் பாசிர் மாஸ்
நகரம்பாசீர் மாஸ்
உள்ளாட்சிபாசீர் மாஸ் உள்ளாட்சி மன்றம்[1]
பரப்பளவு
 • மொத்தம்570 km2 (220 sq mi)
மக்கள்தொகை
 (2022)
 • மொத்தம்2,33,400
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
17xxx
தொலைபேசி எண்கள்+6-09
போக்குவரத்துப் பதிவெண்கள்D

பாசிர் மாஸ் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Pasir Mas; கிளாந்தான் மலாய் மொழி: Mache; ஆங்கிலம்: Pasir Mas District; சீனம்: 巴西马县; ஜாவி: ڤاسير مس) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[3]

இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

பொது

[தொகு]

முன்பு கோத்தா பாரு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1918-ஆம் ஆண்டில், பாசீர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாருவில் இருந்து பிரிக்கப்பட்டன. மேலும் பாசீர் மாஸ் மாவட்டத்திற்கு அதன் சொந்த உள்ளூர் நிர்வாக அரசாங்கம் வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் பாசிர் மாஸ் நகரம் ஆகும்.

இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி இன்னும் வேளாண் நிலமாகவே உள்ளது. இங்கு நெல் வயல்கள், செம்பனை பனை மற்றும் ரப்பர் தோட்டங்கள் நிறையவே உள்ளன.

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து

[தொகு]

இங்கு அமைந்துள்ள பாசிர் மாஸ் தொடருந்து நிலையம்; மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu) (KTM) மூலம் இயக்கப்படுகிறது. இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டியின் (KTM Intercity) ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து சேவையின் (Rantau Panjang Line) ஒரு பகுதியாகும். கிழக்கு கடற்கரை தொடருந்து சேவை (East Coast Line), தும்பாட் தொடருந்து நிலையத்தில் (Tumpat Railway Station) முடிவடைகிறது.

ஜொகூர் பாரு மாநகரில் இருந்து புறப்படும் தீமோரான் விரைவுத் தொடருந்து வழக்கமாக காலை 9:00 மணிக்கு பாசீர் மாஸ் வந்து சேரும். வாவ் விரைவுத் தொடருந்து (Ekspress Wau), மாலை 6:30 மணிக்கு கோலாலம்பூர் கே.எல். செண்ட்ரல் (KL Sentral) நோக்கி புறப்படுகிறது. இது 13 மணி நேரப் பயணம்.

ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்

[தொகு]

ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து சேவை வடக்கு நோக்கி ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையத்தில் இருந்து தொடர்கிறது. இது பின்னர் தாய்லாந்து தொடருந்து சேவையுடன் (State Railway of Thailand) இணைக்கிறது.

2008 சூலை மாதம் ஒரு புதிய தொடருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து சேவையின் மலிவான கட்டணம் சிறு வணிகர்களை ஈர்க்கிறது. இந்தச் சிறு வணிகர்கள் பல்வேறு உணவுப் பொருட்களை, ரந்தாவ் பாஞ்சாங்கில் இருந்து தொடருந்துகள் மூலமாகக் கொண்டு செல்கிறார்கள்.

தொடருந்துகளின் திட்டமிடப்பட்ட வருகைகள் மற்றும் புறப்பாடுகள்; பாசீர் மாஸ் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை உருவாக்குகிறது. அதனால் சாலகளைக் கடக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pejabat Tanah Dan Jajahan Machang - Perutusan Ketua Jajahan Machang". www.ptjm.kelantan.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  2. "Laman Web Rasmi - Pejabat Tanah Dan Jajahan Pasir Mas - Sejarah Jabatan". www.ptjpm.kelantan.gov.my. Archived from the original on 2019-03-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-27.
  3. "Map of British Malaya Including The Straits Settlements Federated Malay States and Malay States Not Included In The Federation 1924" (JPG). Raremaps.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்_மாஸ்_மாவட்டம்&oldid=4014248" இலிருந்து மீள்விக்கப்பட்டது