பெங்காலான் செப்பா
பெங்காலான் செப்பா Pengkalan Chepa | |
---|---|
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 5°45′39″N 102°12′57″E / 5.76083°N 102.21583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
தொலைபேசி எண்கள் | +6-09 |
வாகனப் பதிவெண் | D |
பெங்காலான் செப்பா (மலாய் மொழி: Pengkalan Chepa; ஆங்கிலம்: Pengkalan Chepa) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரத்தில்தான் சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் (Sultan Ismail Petra Airport) அமைந்து உள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் இந்த நகரத்தைச் சுருக்கமாக பி.சி. (P.C) என்று அழைக்கிறார்கள். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 8 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 452 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம்
[தொகு]சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தை பொதுவாக, பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் என்று அழைப்பது வழக்கம்.
இந்த வானூர்தி நிலையம், கிளாந்தான், திராங்கானு மாநிலங்களின் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
சுல்தான் இஸ்மாயில் பெட்ரா
[தொகு]1980-ஆம் ஆண்டுகளில் கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் (Ismail Petra of Kelantan) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.[1]
இந்த வானூர்தி நிலையம் முன்னாள் பிரித்தானிய இராணுவத்தின் வானூர்தி நிலையமாகும். இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீதான ஜப்பானியர் படையெடுப்பில் இந்த நிலையம் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1941-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, மலாயாவில் முதல் ஜப்பானிய வானூர்தியின் தரையிறக்கம் இந்த நிலையத்தில் தான் நடைபெற்றது. போருக்குப் பிறகு, பொதுமக்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டது.
வானூர்தி நிலையக் காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sultan Ismail Petra Airport, Kota Bharu at Malaysia Airports Holdings Berhad