உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிர் பூத்தே

ஆள்கூறுகள்: 5°50′N 102°24′E / 5.833°N 102.400°E / 5.833; 102.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாசீர் பூத்தே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாசிர் பூத்தே
Pasir Puteh
நகரம்
பாசிர் பூத்தே நகர நுழைவாயில்
பாசிர் பூத்தே is located in மலேசியா
பாசிர் பூத்தே
பாசிர் பூத்தே
      பாசிர் பூத்தே நகரம்
ஆள்கூறுகள்: 5°50′N 102°24′E / 5.833°N 102.400°E / 5.833; 102.400
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் பாசிர் பூத்தே மாவட்டம்
தொகுதிபாசிர் பூத்தே
உள்ளூராட்சிபாசீர் பூத்தே மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஅகமட் அடிலி யாசின்
(Ahmad Adlee Bin Yasin)
பரப்பளவு
 • மொத்தம்433.8 km2 (167.5 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்1,37,400
மலேசிய அஞ்சல் குறியீடு
16xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்D

பாசிர் பூத்தே (மலாய் மொழி: Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh ; சீனம்: 巴西富地; ஜாவி: ڤباسير بوتيه) என்பது மலேசியா, கிளாந்தான், பாசீர் பூத்தே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாசிர் பூத்தே எனும் பெயரில் ஒரு மாவட்டமும் உள்ளது. நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் பாசிர் பூத்தே.

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே சமயத்தில் பாசீர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த இடம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் மாநிலத்தின் நான்காம் சுல்தான் முகம்மது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் பெயரைப் பெற்றது.

செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே (Pasir Puteh) என்று அறிவித்தார். பாசிர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Latar Belakang - Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Puteh". ptjpp.kelantan.gov.my. Archived from the original on November 30, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்_பூத்தே&oldid=4012488" இலிருந்து மீள்விக்கப்பட்டது