குபாங் கிரியான்
குபாங் கிரியான் | |
---|---|
Kubang Kerian | |
நகரம் | |
ஆள்கூறுகள்: 6°05′N 102°17′E / 6.083°N 102.283°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 16150 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09-7 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
குபாங் கிரியான் (மலாய் மொழி: Kubang Kerian; ஆங்கிலம்: Kubang Kerian) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமும் ஆகும்.[1]
மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 5 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 445 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நகரில் கிளாந்தான் மாநில அரசரின் அரண்மனை உள்ளது. அத்துடன் கிளாந்தான் சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது.
பொது
[தொகு]குபாங் கிரியானில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. மிகப்பெரிய பள்ளிவாசல் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா பள்ளிவாசல் (Sultan Ismail Petra Mosque) ஆகும். நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) என்றும் அழைக்கப்படுகிறது.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (University of Science, Malaysia) சுகாதார வளாகம் (Health Campus) இந்த நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. 723 படுக்கைகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மருத்துவமனையும் (Hospital Universiti Sains Malaysia) உள்ளது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Kubang Kerian is the name given to a town, district, and constituency in the Kota Bharu district of Kelantan". www.heritagemalaysia.my.
- ↑ "In accordance with that decision, the government has decided that a complex for the School of Medical Sciences to be built at Kubang Kerian and a hospital that was under construction since 1977, by the Ministry of Health was taken over by USM. The hospital that cost RM29.5 million was then established as a teaching hospital". பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.