மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரங்கொத்தி
Melanerpes striatus001.jpg
Hispaniolan Woodpecker
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
துணைவகுப்பு: புதுப்பிரிவு பறவைகள் (Neornithes)
உள்வகுப்பு: புது அலகுப் பறவைகள் (Neognathae)
பெருவரிசை: புதுப்புள் (Neoaves)
வரிசை: மரங்கொத்தி வரிசை (Piciformes)
துணைவரிசை: மரங்கொத்தித் துணை வரிசை (Pici)
குடும்பம்: மரங்கொத்திக் குடும்பம் (Picidae)
Vigors, 1825
Subfamilies

Jynginae - wrynecks
Nesoctitinae - Antillean Piculet
Picinae - மரங்கொத்திகள்
Picumninae - typical piculets

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஏறத்தாழ 95 சதவீத மரங்கொத்திகள் மர வாழ் பறவைகள்.

மிகவும் கூர்மையான, வலுவான அலகுகளைக் கொண்ட இந்தப் பறவைகளுக்குப் மரங்களிலும் வாழும் பூச்சிகளே முக்கிய உணவு. இந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், பசைத் தன்மை கொண்டிருப்பதாலும் தன் அலகு செல்ல முடியாத மரப்பொந்துகளில், தன் நாக்கை நீட்டி, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும். பூச்சிகள் தவிர, பழங்கள், பருப்புகள், பூவிலிருக்கும் தேன் ஆகியவையும் இவை விரும்பி உண்ணும். மரங்கொத்திகள் மரத்தில் துளையிட்டு அதில் தங்களது குஞ்சுகளை வளர்க்கும்.[1] மரத்தை இவை கொத்தும்போது ஏற்படும் ஒலியைத் தவிர, தன் இனத்தைச் சேர்ந்த இதர பறவைகளுடன் தொடர்புகொள்ள மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்பக்கூடியன. குறிப்பாக, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காக இவ்வாறு அது ஒலி எழுப்பும். இவற்றால் ஒரு நாளைக்கு எட்டு ஆயிரம் முதல் 12 ஆயிரம் முறை, மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்ப முடியும்.[2]

மரங்கொத்தி என்னும் விளையாட்டு தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களால் தோப்புகளில் விளையாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சு. தியடோர் பாஸ்கரன் (2018 சூலை 6). "பறவைகளின் கூடுகளும் நரிகளின் குழிகளும்". கட்டுரை. இந்து தமிழ். 8 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. ராதிகா ராமசாமி (2018 அக்டோபர் 20). "அஞ்சல் கொத்திப் பறவை". கட்டுரை. இந்து தமிழ். 22 அக்டோபர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரங்கொத்தி&oldid=2646581" இருந்து மீள்விக்கப்பட்டது