கொசு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொசு உள்ளான்
Little Stint
Little Stint.jpg
கோடையின் கடைசிப் பகுதியில் கொசு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Charadriiformes
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Calidris
இனம்: C. minuta
இருசொற் பெயரீடு
Calidris minuta
Leisler, 1812
Synonyms

Erolia minuta

Calidris minuta
Calidris minuta

கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது சிறிய, கூரான, கருமை நிறஅலகினையும் நடுத்தரமான நீளங்கொண்ட கருங்கால்களையும் உடையது; வேகமாக இயங்கக்கூடியது. ஆர்க்டிக் ஐரோப்பியப் பகுதிகளிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பனிக்காலங்களில் நெடுந்தொலைவு வலசை போகின்றன (migrate); பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் தெற்காசியப் பகுதிகளுக்கும் தான் இவை குடிபெயர்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசு_உள்ளான்&oldid=3206876" இருந்து மீள்விக்கப்பட்டது