சந்தீப் பாட்டில்
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 4 2006 |
சந்தீப் மதுசுதன் பட்டேல் (Sandeep Patil,மராத்தி: संदीप मधुसुदन पाटील ⓘ பிறப்பு: ஆகத்து 18 1956), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டில் இருந்து பிசிசிஐயின் தலைமை தேர்வாளர் ஆவார். இவர் கென்ய துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரின் தலைமையில் தான் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் கென்ய அணி அரையிறுதி வரை சென்றது. இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் இவர் மும்பை சேம்ப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.பின் அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தொடர் கைவிடப்பட்டது.இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரை தேசியத் துடுப்ப்பாட்ட சங்கத்தின் நிர்வாக இயக்குநராக இவரை நியமனம் செய்தது. இதற்கு முன்பாக தேவ் வாட்மோர் இந்தப் பதவியில் இருந்தார்.[1] செப்டம்பர் 27,2017 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]
துடுப்பாட்ட வாழ்க்கை
[தொகு]தனது துவக்க காலங்களில் மித வேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். ரோஹின்தன் பாரிய கோப்பைத் தொடரில் இவர் மூன்று ஆண்டுகள் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். மேலும் 1975-76 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 1979 ஆம் ஆண்டில் இவர் தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியதன மூலம் பரவலாக அறியப்பட்டார். அந்தப் போட்டியில் மும்பை அணி 72 ஓட்டங்களுக்கு நான்குஇலக்குகளை இழந்து இருந்தது. ஆறாவது வீரராகக் கள்ம் இறங்கிய இவர் 276 நிமிடங்கள் விளையாடி 145 ஓட்டங்களை எடுத்தார். மற்ற வீரர்கள் 25 ஓட்டங்களை தாண்டவில்லை. மேலும் அதில் 18 நான்கு ஓட்டங்களும்க் ஓர் ஆறு ஓட்டங்களும் அடங்கும்.[3] 1979 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மிடில்செக்ஸ் லீக் தொடரில் இவர் எட்மண்ட்டன் அணிக்காக விளையாடினார். 1981 ஆம் ஆண்டில் அதே தொடரில் சாமர்செட் ஆ அணிக்காக விளையாடினார்.
1979 -1980 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் மேற்குப் பகுதியின் அணி சார்பாக இவர் விளையடினார். இந்தத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் முதல் ஆட்டப் பகுதியில் 44 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 23 ஓட்டங்கள் எடுத்தார்.[4] பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 68 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 71 ஓட்டங்களும் எடுத்தார்.[4] பின் வான்கேடே அரங்கத்தில் நடைபெற்ற சௌராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் சிறப்பாக விளையாடினார். இந்தப் போட்டியில் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் 45* ஓட்டங்கள் எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 139 பந்துகளில் 105 ஓட்டங்களும் , 205 பந்துகளில் 210 ஓட்டங்களும் எடுத்தார். இதில் 7 ஆறுகளும் 19 நான்குகளும் அடங்கும்.[5] இவரின் இறுதி ஆறு ஓட்டமானது வான்கடே அரங்கத்திற்கு வெளியே சென்றது. பின் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இவர் 62 ஓட்டங்களை எடுத்தார்.[6] தொடர்ந்து சிறப்பான திறனை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் 1980-1981 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[7] பின் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்தத் தொடரில் தெற்கு ஆத்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 116 ஓட்டங்களை எடுத்தார்.[8] குயீன்சிலாந்துக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 60 ஓட்டஙகளும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 97 ஓட்டங்களும் எடுத்தார்.[9] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 64 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[10]
மேலும் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் இடைவேளைக்கு முன்னதாக 65 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இவர் ஹாக் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் லென் பேஸ்கோ என்பவர் வீசிய பந்தில் இவரின் வலது காதில் அடிபட்டதனால் இவர் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் திரும்பினார். பின் அப்போதைய இந்துயத் துடுப்பாட்ட அனியின் தலைவரான சுனில் கவாஸ்கர் அணியின் ஆட்டப் பகுதி தோல்வியினைத் தவிர்க்க இவரை மீண்டும் களம் இறங்க அறிறுத்தினார்.[11] பின் அடிலெய்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் 130 ஓட்டங்களுக்கு நான்கு இலக்குகளை இழந்திருந்தது. ஆத்திரேலியாவின் மொத்த ஓட்டங்கள் 528 ஆக இருந்தது. பின் களம் இறங்கிய இவர் 174 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய மண்ணில் அப்போது இந்திய வீரர் ஒருவர் ஒரு ஆட்டப் பகுதியில் எடுக்கும் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். இதில் 24 நான்குகள் அடங்கும்.[12] அதன்பின் நியூசிலந்திற்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கபில்தேவ் உடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 1981 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அனி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அந்தத் தொடரில் விளாஇயாடிய பிறகு இவர் சில போட்டித் தொடர்களில் தேர்வாகவில்லை.மான்செஸ்டரில் நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களை பதிவு செய்தார். இந்தத் தொடரின் ஒரு போட்டியில் இந்திய அணி பாலோ ஆன் ஆகும் நிலையில் இருந்த போது கபில் தேவ் உடன் இணைந்து 96 ஓட்டங்கள் எடுத்தார். பின் இயம் போத்தம் வீசிய ஒரு ஓவரில் இறுதி இரண்டு பந்துகளில் நான்குமற்றும் மூன்று ஓட்டங்களை எடுத்தார். பாப் வில்சு ஓவரில் ஆறு நான்கு ஓட்டங்களை எடுத்தார்.[2] அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களை எடுத்தார்.[13] இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மூன்றாவது நூறு ஓட்டங்களை எடுத்தார். பிறகு இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது அந்தத் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. பின் ரன்சிக் கோப்பைத் தொடரில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் முதல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 121* ஓட்டங்களைன்84 பந்துகளில் எடுத்தார்.
.
சான்றுகள்
[தொகு]- ↑ "Patil replaces Whatmore as NCA head". பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
- ↑ "Patil is Chief Selector, Amarnath exits". Wisden India. 27 September 2012 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208183717/http://www.wisdenindia.com/cricket-news/binny-to-head-selection-panel-amarnath-leaves/27694.
- ↑ "Bombay v Delhi : Ranji Trophy 1978/79 (Semi-Final)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ 4.0 4.1 "West Zone v Australians : Australia in India 1979/80". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "Bombay v Saurashtra : Ranji Trophy 1979/80 (West Zone)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "India v Pakistan : Pakistan in India and Bangladesh 1979/80 (6th Test)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "India v England : England in Australia and India 1979/80 (Only Test)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "South Australia v Indians : India in Australia and New Zealand 1980/81". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "Queensland v Indians : India in Australia and New Zealand 1980/81". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "Australia v India : Benson and Hedges World Series Cup 1980/81". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "Australia v India : India in Australia and New Zealand 1980/81 (1st Test)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "Australia v India : India in Australia and New Zealand 1980/81 (2nd Test)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
- ↑ "England v India : India in British Isles 1982 (2nd Test)". Cricketarchive.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.