வினோத் காம்ப்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vinod Kambli at Mumbai Marathon 2007 (7) (cropped).jpg

வினோத் கன்பத் காம்ப்ளி (Vinod Ganpat Kambli மராத்தி: विनोद कांबळी) மும்பையை சேர்ந்த இந்திய துடுப்பாட்ட வீரர். 1991ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காம்ப்ளி அறிமுகமானார். கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய சில மாதங்களிலே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து திடீர் புகழ் பெற்றார். இவர் இதுவரை 17 டெஸ்டில் பங்கேற்று நான்கு சதம் உட்பட 1087 ரன்களும், 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் உட்பட 2477 ரன்களும் எடுத்துள்ளார்.

வினோத் காம்ப்ளி, பிரபல துடுப்பாட்ட வீரரான சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் . இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தின் போது இணைந்து 664 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_காம்ப்ளி&oldid=2790101" இருந்து மீள்விக்கப்பட்டது