கிரகாம் பொலொக்
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிரகாம் பொலொக் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 218) | திசம்பர் 6 1963 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 5 1970 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், நவம்பர் 4 2008 |
கிரகாம் பொலொக் (Graeme Pollock, பிறப்பு: பிப்ரவரி 27 1944), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர்.இவர் துடுப்பாட்டக் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.[1][2] இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 262 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
பொல்லாக் கிரே உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் . அது போர்ட் எலிசபெத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தகுந்த விளையாட்டுப் பள்ளி ஆகும் . இங்கு அவருக்கு சசெக்ஸ் துடுப்பாட்ட அணியின் தொழில்முறை பயிற்சியாளரான ஜார்ஜ் காக்ஸ் பயிற்சியளித்தார் . தனது 9 ஆம் வயதில் கிரே தனது முதல் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்கள் எடுப்பதற்கு முன்பாக பந்துவீச்சில் அனைத்து பத்து இழப்புகளையும் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் அவர் ஒரு ஆறு ஓட்டத்தினை பக்கத்தில் இருந்த கல்லறையில் அடித்தார் . பின்னர் அந்தப் பந்தை தானே எடுக்க வேண்டியிருந்தது. பள்ளி முதல் லெவன் அணியின் சுழற்பந்து வீச்சாளராக தனது முதல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார், ஐந்து ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆறு இழப்புகளை வீழ்த்தினார். 15 ஆம் வயதில், தென்னாப்பிரிக்காவின் பள்ளி மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பொல்லாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பொல்லாக் பிப்ரவரி 27, 1944 அன்று தென்னாப்பிரிக்க ஒன்றியம், நடால் மாகாணம், டர்பனில் ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா ஒரு பிரஸ்பைடிரியன் மந்திரி ஆவார். அவரது தந்தை ஆண்ட்ரூ, ஆரஞ்ச்ய் ஃப்ரீ ஸ்டேட் துடுப்பாட்ட அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு மாகாண ஹெரால்டு ஆசிரியராக இருந்தார். இளைஞனாக இருந்த போது, பொல்லாக் லிட்டில் டாக் என்ற புனைப்பெயரைப் பெற்றார்: 1960 ஆம் ஆண்டில், 16 வயதில், கிரே உயர்நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த போது, பொல்லாக் கிழக்கு மாகாணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். பார்டர் அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.கிழக்கு லண்டனில் உள்ள ஜான் ஸ்மட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இவர் ரன் அவுட் ஆனார். பின்னர் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரண்டு இழப்புகளை வீழ்த்தினார். அந்த பருவத்தின் பிற்பகுதியில் அவர் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்ட நூறினை அடித்தார், டிரான்ஸ்வால் ஆ துடுப்பாட்ட அணிக்கு எதிராக 102 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 ஓட்டங்கள் அடித்த தென்னாப்பிரிக்க இளையவர் என்ற பெருமையைப் பெற்றார். பொல்லாக் தனது முதல் பருவத்தில் ஈபிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி, 48.00 சராசரியில் 384 ஓட்டங்கள் எடுத்தார். 1961 ஆம் ஆண்டில், தனது பெற்றோருடன் பிரிட்டனுக்குச் சென்றபோது, அவர் சசெக்ஸ் இரண்டாம் லெவன் துடுப்பாட்ட அணி உடன் ஆறு போட்டிகளில் விளையாடினார்.
பொல்லக்கின் தந்தை ஆண்ட்ரூ பொல்லாக் ஸ்காட்லாந்தில் இருந்து குடியேறியவர் ஆவார். இவர் ஆரஞ்சு ஃப்ரீ ஸ்டேட்டிற்காக துடுப்பாட்டம் விளையாடினார். அதே நேரத்தில் அவரது சகோதரர் பீட்டர் பொல்லாக் தென்னாப்பிரிக்காவுக்காக 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய முன்னணி விரைவு வீச்சாளராக இருந்தார். கிரேம் பொல்லக்கின் மகன்களான அந்தோனி பொல்லாக் மற்றும் ஆண்ட்ரூ கிரேம் பொல்லாக் இருவரும் டிரான்ஸ்வால் மற்றும் கடெங்கிற்காக துடுப்பாட்டம் விளையாடினர், அதே நேரத்தில் அவரது மருமகன் ஷான் பொல்லாக் (பீட்டரின் மகன்) 2008 இல் தென்னாப்பிரிக்க தேர்வு அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Player Profile: Graeme Pollock". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.
- ↑ "The real deal". CricInfo. 16 July 2003. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.