போர்ட் எலிசபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போர்ட் எலிசபெத்
எலிசபெத் துறைமுகம்

Die Baai (ஆபிரிக்கானா)
iBhayi (சோசா)
நகர மன்றம், சந்தைச் சதுக்கம், போர்ட் எலிசபெத்.
நகர மன்றம், சந்தைச் சதுக்கம், போர்ட் எலிசபெத்.
நாடுதென்னாப்பிரிக்கா
மாகாணம்கிழக்கு கேப்
நகராட்சிநெல்சன் மண்டேலா விரிகுடா
Established1820
அரசு
 • நகரத்தந்தைஅதோல் டிரோல்லிப் (சனநாயக கூட்டணி)
பரப்பளவு[1]
 • நகரம்251.03
 • Metro1,959
மக்கள்தொகை (2011)[1]
 • நகரம்3,12,392
 • அடர்த்தி1
 • பெருநகர்[1]11,52,915
 • பெருநகர் அடர்த்தி590
இனப் பகுப்பு(2011)[1]
 • கருப்பின ஆபிரிக்கர்30.6%
 • கலவை நிறத்தவர்27.0%
 • இந்தியர்/ஆசியர்3.2%
 • வெள்ளையர்37.8%
 • பிறர்1.4%
தாய்மொழிகள் (2011)[1]
 • ஆபிரிக்கான மொழி40.2%
 • தெ.ஆ.ஆங்கிலம்33.2%
 • சோசா22.2%
 • Other4.3%
Telephone numbers in South Africa041

போர்ட் எலிசபெத் (Port Elizabeth, தமிழ்:எலிசபெத் துறைமுகம்) அல்லது தி பே (The Bay, விரிகுடா)[2] ( ஆபிரிக்கான மொழி: Die Baai) தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்; இது கிழக்கு கேப் மாகாணத்தில், கேப் டவுனுக்கு கிழக்கே 770 கிமீ (478 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் சிலநேரங்களில் PE என தனது ஆங்கில முதலெழுத்துக்களாலும் "நட்பான நகரம்" அல்லது "காற்றடிக்கும் நகரம்" எனவும் குறிப்பிடப்படுகின்றது. அல்கோவா விரிகுடாவில் 16 கிமீக்கு பரந்துள்ள இந்த நகரம் தென்னாப்பிரிக்காவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். கேப் டவுனுக்கிற்கும் தெற்கேயுள்ள போர்ட் எலிசபெத் ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள பெரிய நகரமாக விளங்குகின்றது.

போர்ட் எலிசபெத் 1820இல் கேப் குடியேற்றத்தை சோசா மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு பிரித்தானிய குடியேற்றமாக நிறுவப்பட்டது. இது இப்போது நெல்சன் மண்டேலா விரிகுடா பெருநகர நகராட்சியின் அங்கமாக உள்ளது; பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 1.3 மில்லியன் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Port Elizabeth
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_எலிசபெத்&oldid=2543718" இருந்து மீள்விக்கப்பட்டது