ஷான் பொலொக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷான் பொலொக்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஷான் பொலொக்
பிறப்பு 16 செப்டம்பர் 1973 (1973-09-16) (அகவை 46)
தென்னாப்பிரிக்கா
உயரம் 6 ft 2 in (1.88 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 261) நவம்பர் 16, 1995: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சனவரி 10, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 39) சனவரி 9, 1996: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 3, 2008:  எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 108 303 186 435
ஓட்டங்கள் 3,781 3,519 7,021 5,494
துடுப்பாட்ட சராசரி 32.31 26.45 33.11 26.66
100கள்/50கள் 2/16 1/14 6/35 3/24
அதிகூடிய ஓட்டங்கள் 111 130 150* 134*
பந்து வீச்சுகள் 24,353 15,712 39,067 21,588
வீழ்த்தல்கள் 421 393 667 573
பந்துவீச்சு சராசரி 23.11 24.50 23.25 22.93
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 16 5 22 7
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 1 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/87 6/35 7/33 6/21
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 72/– 108/– 132/– 153/–

செப்டம்பர் 20, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஷான் மெக்லியன் பொலொக் (Shaun Maclean Pollock, பிறப்பு: செப்டம்பர் 16 1973), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 303 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 186 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 435 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -2008 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 -2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அணியின் தலைவராக இருந்துள்ளார். சகலத்துறையரான இவர் அலன் டொனால்டுடன் இணைந்து பல ஆண்டுகள் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். 2000முதல் 2003 ஆம் ஆண்டுவரை தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும், ஆப்பிரிக்க லெவன், உலக லெவன் அகிய அணிகளுக்காகாவும், டால்பின்ஸ் மற்றும் வார்க்விக்‌ஷயர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.

சனவரி 11,2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.பின் பெப்ரவரி 3 இல் தனது 303 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியோடு ஓய்வு பெற்றார்[1]. இவர் டர்பனில் உள்ள நார்த் வுட் பள்ளியில் பயின்றார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

நவம்பர் 16, 1995 இல் செஞ்சூரியனில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார்.இதில் 29 ஓவர்களை வீசி 98 ஓட்டங்களி விட்டுக்கொடுத்தார். இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] இந்தப் போட்டி சமனில் முடிந்தது. பின் சனவரி 9, 1996 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அறிமுகமானார்.[3] இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்தார். பின் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 10 ஓவர்களை வீசினார் அதில் 34 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 205 ஓட்டங்களில் வீழ்த்தி அணியை வெற்றி பெறுவதற்கு உதவினார். மேலும் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.[4]

சாதனைகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 9 ஆவது வீரராக களம் இறங்கி அதிக முறை நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் நூறு ஓட்டங்களை அடித்துள்ளார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் புரிந்த ஒரே வீரர் இவர் ஆவார்.[5] இவர் தனது 190 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தான் முதல் நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் நூறு அடிப்பதற்கு முன் அதிக ஒருநாள் போட்டிகள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டப்பகுதியில் 99 ஓட்டங்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணித் தலைவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[7][8] சொந்த மண்ணில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் சதனையைப் படைத்தார். 193 இலக்குகளைக் கைப்பற்றி இந்தச் சாதனையைப் படைத்தார்.[9]

சான்றுகள்[தொகு]

  1. Pollock announces his retirement BBC News retrieved 11 January 2008
  2. 1st Test, England tour of South Africa at Centurion, Nov 16-20 1995 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/16250/scorecard/63700/south-africa-vs-england-1st-test-england-tour-of-south-africa-1995-96/#gp-inning-00, பார்த்த நாள்: 2018-05-16 
  3. 1st ODI (D/N), England tour of South Africa at Cape Town, Jan 9 1996 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/16250/scorecard/64511/south-africa-vs-england-1st-odi-england-tour-of-south-africa-1995-96/, பார்த்த நாள்: 2018-05-16 
  4. 1st ODI (D/N), England tour of South Africa at Cape Town, Jan 9 1996 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/16250/scorecard/64511/south-africa-vs-england-1st-odi-england-tour-of-south-africa-1995-96/, பார்த்த நாள்: 2018-05-16 
  5. "Most test centuries at each batting positions". Cricinfo.com. பார்த்த நாள் 2017-03-24.
  6. "HowSTAT! ODI Cricket - Most Innings before First Century".
  7. "Statistics / Statsguru / Test matches / Batting records".
  8. "Stranded on 99, and stranded on four".
  9. "Most wickets taken by a bowler in ODI matches played at home soil".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷான்_பொலொக்&oldid=2714128" இருந்து மீள்விக்கப்பட்டது