டேவிட் வார்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் வார்னர்
Refer to caption
ஜனவரி 2014இல் வார்னர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் ஆண்ட்ரூ வார்னர்
பிறப்பு27 அக்டோபர் 1986 (1986-10-27) (அகவை 37)
பாடிங்டன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்Lloyd,[1] the Reverend, Bull[2]
உயரம்170 cm (5 அடி 7 அங்)
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர் விலகு
வலது-கை விரைவு
பங்குதொடக்க மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 426)1 டிசம்பர் 2011 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு12 டிசம்பர் 2019 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 170)18 ஜனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்31
இ20ப அறிமுகம் (தொப்பி 32)11 ஜனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப8 நவம்பர் 2019 எ. பாக்கித்தான்
இ20ப சட்டை எண்31
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–presentநியூ சவுத் வேல்ஸ்
2009டர்ஹாம்
2009–2013டெல்லி டேர்டெவில்ஸ்
2010மிடில்செக்ஸ்
2011/12; 2013/14சிட்னி தண்டர்
2012/13சிட்னி சிக்சர்ஸ்
2014–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத்
2018சென்ட் லூசியா ஸ்டார்ஸ்
2019சில்ஹெட் சிக்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 81 116 76 111
ஓட்டங்கள் 6,947 4,990 2,079 9,333
மட்டையாட்ட சராசரி 48.58 45.77 30.57 48.86
100கள்/50கள் 23/30 17/20 1/15 31/38
அதியுயர் ஓட்டம் 335* 179 100* 335*
வீசிய பந்துகள் 342 6 595
வீழ்த்தல்கள் 4 0 6
பந்துவீச்சு சராசரி 67.25 75.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/45 2/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
65/– 53/– 43/– 80/–
மூலம்: ESPNcricinfo, 12 டிசம்பர் 2019

டேவிட் ஆன்ட்ரூ வார்னர் (David Andrew Warner, பிறப்பு: 27 அக்டோபர் 1986) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஆத்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.இடது-கை தொடக்க மட்டையாளரான இவர் 132 ஆண்டுகளில் முதல்தரத் துடுப்பாட்ட அனுபவம் எதுவும் இன்றி ஆத்திரேலியத் தேசிய அணிக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது வீரர் ஆவார்[3][4][5][6] இவர் தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநில அணி , சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிட்னி தண்டர் அணிகளுக்காக உள்ளுர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[7]

2015 முதல் 2018 வரை தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் துணைஅணித் தலைவராக இருந்தார்.

துவக்கத்தில் ஸ்லிப்பில் களத்தடுப்பாடினார். பின் 2016 ஆம் ஆண்டில் கைவிரலில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் மத்திய திசையில் களத்தடுப்பாடி வருகிறார். ஜனவரி 23, 2017 இல் ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றார். இந்தப் பதக்கத்தை வென்ற நான்காவது வீரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக இந்தப் பதக்கத்தை ஒரு முறைக்கு மேல் பெற்றவர் எனும் சாதனை படைத்தார்.

ஏப்ரல், 2017 அன்றைய நிலவரப்படி, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையின் படி தேர்வுத் துடுப்பாட்டத்தில் 6 ஆவது இடத்திலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்யில் 3 ஆவது இடத்திலும் உள்ளார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 1500 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆத்திரேலிய மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[8] ஒர் ஆண்டில் ஏழு நூறுகள் அடித்த முதல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். செப்டம்பர் 28, 2017 இல் தனது 100 வது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் 100 வது போட்டியில் 100 ஓட்டங்கள் அடித்த முதல் ஆத்திரேலிய வீரர் மற்றும் 8 வது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[9][10]

2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கையின் படி வார்னர், ஸ்டீவ் சிமித் மற்றும் கேமரான் பான்கிராஃப்ட் ஆகியோரை ஒரு ஆண்டுகாலம் சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[11][12] இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தேர்வானதை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் தடைசெய்தது.[13]

2009-10 காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் அணியான தில்லி டேர்டெவில்சில் சேர்க்கப்பட்டார்.[14] 2014 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினால் 880,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.[15]

சிட்னியின் பாடிங்டன் என்ற புறநகரில் பிறந்த டேவிட் வார்னர்[16] 19-வயதிற்கு உட்பட்டோருக்கான ஆத்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு இலங்கை சென்று விளையாடினார்.[17]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டேவிட் ஆண்ட்ரூ வார்னர் அக்டோபர் 27, 1986 அன்று பட்டிங்டன், சிட்னியில் பிறந்தார். தனது 13 ஆம் வயதில் இடது-கையில் மட்டையாடி வந்தபோது இவரது பயிற்சியாளர் வலது-கையால் மட்டையாடும்படி அறிவுறுத்தினார்.[18] இவர் விளையாடிய ஒரு பருவத்திற்கு பின் இவரது தாய் ஷெய்லா வார்னர் அவரை மீண்டும் இடதுகையால் விளையாடும்படி அறிவுறுத்தினார். அதன் பின் சிட்னி கோஸ்டல் துடுப்பாட்ட சங்க 16 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் பல சாதனைகளைப் படைத்தார். தனது 15 ஆவது வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பின் 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின் தேசிய அணியில் இடம்பெற்றார்.[19] இவர் ராண்ட்விக் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.[20]

பன்னாட்டு நூறுகள்[தொகு]

தேர்வு நூறுகள்[தொகு]

டேவிட் வார்னரின் தேர்வு நூறுகள்
ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 123* 2  நியூசிலாந்து ஆத்திரேலியா ஹோபார்ட், ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் 2011 தோல்வி
2 180 5  இந்தியா ஆத்திரேலியா பேர்த், ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2012 வெற்றி
3 119 11  தென்னாப்பிரிக்கா ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2012 சமம்
4 124 23  இங்கிலாந்து ஆத்திரேலியா பிரிஸ்பேன், ஆத்திரேலியா பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் 2013 வெற்றி
5 112 25  இங்கிலாந்து ஆத்திரேலியா பேர்த், ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2013 வெற்றி
6 115 28  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா செஞ்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர் ஸ்போர்ட் பார்க் 2014 வெற்றி
7 135 30  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா கேப் டவுன், தென்னாப்பிரிக்கா நியூலண்ட்சு கிரிக்கெட் அரங்கு 2014 வெற்றி
8 145  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா கேப் டவுன், தென்னாப்பிரிக்கா நியூலண்ட்சு கிரிக்கெட் அரங்கு 2014
9 133 31  பாக்கித்தான் ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டு அரங்கு 2014 தோல்வி
10 145 33  இந்தியா ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2014 வெற்றி
11 102  இந்தியா ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2014
12 101 36  இந்தியா ஆத்திரேலியா சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2015 சமம்

ஒருநாள் பன்னாட்டு நூறுகள்[தொகு]

டேவிட் வார்னரின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 163 19  இலங்கை ஆத்திரேலியா பிரிஸ்பேன், ஆத்திரேலியா பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் 2012 வெற்றி
2 100 20  இலங்கை ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2012 தோல்வி
3 127 51  இங்கிலாந்து ஆத்திரேலியா சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2015 வெற்றி

இருபது 20 நூறுகள்[தொகு]

டேவிட் வார்னரின் இருபது20 நூறுகள்
# ஓட்டங்கள்
4s 6s விளையாடிய அணி எதிரணி இடம்ஆண்டு
1 107* 69 9 5 டெல்லி டேர்டெவில்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புது தில்லி 2010
2 135* 69 11 8 நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 2011
3 123* 68 6 11 நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2011
4 102* 51 6 6 சிட்னி தண்டர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மெல்பேர்ண் 2011
5109* 54 10 7டெல்லி டேர்டெவில்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ்ஐதராபாத்து (இந்தியா) 2012
6 126 59 10 8 சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐதராபாத்து (இந்தியா) 2017

மேற்கோள்கள்[தொகு]

 1. "David Warner". ESPNcricinfo. Cricket Players and Officials. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
 2. "No joking, it's The Turtle and the Reverend". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2017.
 3. "David Warner – cricket.com.au". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
 4. "Big four? What about Warner?".
 5. http://stats.espncricinfo.com/ci/engine/team/2.html?captain_involve=48739;class=3;filter=advanced;spanmin1=17+Feb+2011;spanval1=span;template=results;type=team;view=results
 6. Coverdale, Brydon (11 சனவரி 2009). "Warner will be hard to resist—Ponting". Cricinfo.
 7. "Player Profile: David Warner". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. "Records / Twenty20 Internationals / Batting records / Most runs in career". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
 9. "India eye record winning streak against wilting Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
 10. "David Warner becomes first Australia player to score century in 100th ODI". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
 11. "Tampering trio learn their fate". cricket.com.au. https://www.cricket.com.au/news/player-sanctions-steve-smith-cameron-bancroft-david-warner-australia-cricket-ball-tampering/2018-03-28. 
 12. "Trio suspended by Cricket Australia". பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
 13. "IPL tear up $2.4m Warner, Smith deals". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
 14. Big hitting Blues batsman hits the jackpot 17 டிசம்பர் 2008 – 12:53PM
 15. "IPL Auction 2014 Highlights: RCB buys Yuvraj Singh for 17 Crores". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 16. "David Warner". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 15 July 2009.
 17. Pandaram, Jamie (13 சனவரி 2009). "Warner brothers come up with a blockbuster". சிட்னி மோர்னிங் எரால்டு. http://www.smh.com.au/news/sport/cricket/warner-brothers-blockbuster/2009/01/12/1231608617044.html?page=2. பார்த்த நாள்: 15 சூலை 2009. 
 18. "David Warner". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 July 2009.
 19. Pandaram, Jamie (13 January 2009). "Warner brothers come up with a blockbuster". The Sydney Morning Herald. http://www.smh.com.au/news/sport/cricket/warner-brothers-blockbuster/2009/01/12/1231608617044.html?page=2. பார்த்த நாள்: 15 July 2009. 
 20. "Warner set to strike on return home to SCG". Wentworth Courier. http://wentworth-courier.whereilive.com.au/sport/story/warner-set-to-strike-on-return-home-to-scg. பார்த்த நாள்: 18 February 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_வார்னர்&oldid=3930562" இலிருந்து மீள்விக்கப்பட்டது