மிட்செல் மார்ஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிட்செல் மார்ஷ்
Mitchell Marsh
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிட்செல் ரொஸ் மார்ஷ்
பட்டப்பெயர் பைசன்
வகை பல்துறை
துடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலக்கை விரைவு-நடுத்தரம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 22 அக்டோபர், 2014: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு 17 டிசம்பர், 2014: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 190) அக்டோபர் 19, 2011: எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 19, 2014:  எ தென்னாப்பிரிக்கா
முதல் இ20ப போட்டி (cap 54) அக்டோபர் 16, 2011: எ தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப போட்டி பெப்ரவரி 3, 2014:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009– மேற்கு ஆஸ்திரேலியா
2010 டெக்கான் சார்ஜர்ஸ்
2011–2013 புனே வாரியர்சு இந்தியா
2011– பேர்த் ஸ்கோர்ச்சர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒருஇ20பமுத
ஆட்டங்கள் 4 12 3 43
ஓட்டங்கள் 262 360 49 2,032
துடுப்பாட்ட சராசரி 37.42 36.00 24.50 29.44
100கள்/50கள் 0/1 0/4 0/0 2/12
அதிகூடிய ஓட்டங்கள் 87 89 36 211
பந்து வீச்சுகள் 366 282 30 3,158
வீழ்த்தல்கள் 1 5 1 57
பந்துவீச்சு சராசரி 164.00 50.20 41.00 29.33
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 1
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/14 2/23 1/30 6/84
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/– 7/- 1/- 24/-

சனவரி 10, 2015 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

மிட்செல் ரொஸ் மார்ஷ் (Mitchell Ross Marsh, பிறப்பு: 20 அக்டோபர் 1991) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கு ஆத்திரேலிய மாநில அணிக்கும், பேர்த் ஸ்கோர்ச்சசு அணிக்கும் விளையாடுகிறார். வலக்கை பல்-துறை ஆட்டக்காரரான இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் புனே வாரியர்சு இந்தியா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளில் விளையாடினார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மிட்ச்செல் மார்ஷ் பேர்த் நகரில் பிறந்தவர். இவர் ஜெஃப் மார்ஷ்சின் மகனும், சோன் மார்ஷின் சகோதரரும் ஆவார். இவர்கள் இருவரும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் தேர்வுப் போட்டிகளில் விளையாடினர்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

அக்டோபர் 22, 2014 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1]

செப்டம்பர், 2011 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் விளையாடும் அணியில் இவர் இடம்பெற்றார்.[2] பின் பிறெட் லீ காயம் காரணமாக விலகியதால் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.[3] இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கவுக்க்கு எதிரான இரண்டாவது இருபது20 போட்டியில் இவர் 36 ஓட்டங்களை எடுத்தார். அதில் நான்கு ஆறுகள் அடங்கும். இவற்றில் மூன்று ஆறுகள் இறுதி ஓவரில் அடிக்கப்பட்டது ஆகும்.[4]

ஆகஸ்டு, 2014 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்றாவதாக களம் இறங்கி கிளென் மாக்சுவெல் உடன் இணைந்து 109 ஓட்டங்கள் எடுத்தார். பின் ஆரன் பிஞ்ச் உடன் இணைந்து 47 ஓட்டங்களும், ஜோர்ஜ் பெய்லியுடன் இணைந்து 33 ஓட்டங்களும் எடுத்தார்.[5]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பெப்ரவரி 4, 2015 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். இதில் மூன்று நான்குகளும் அடங்கும். பின் 9 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சனவரி 23, 2016 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 81 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் சகவீரர் டேவிட் வார்னரும் இந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். ஆயினும் இந்திய அணி வெற்றி பெற்றது.[6]

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017 தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டார்.பின் மார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது தகாத வார்த்தைகளினால் அவரைத் திட்டியதற்காக இவருக்கு ஆட்டத்தின் வருமானத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. .[7][8] ஏப்ரல் மாதம் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவருக்கு விருது வழங்கியது.[9][10]

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு அரங்கம் ஆண்டு முடிவு
1 181 22  இங்கிலாந்து ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2017 வெற்றி
2 101 24  இங்கிலாந்து ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2018 வெற்றி

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_மார்ஷ்&oldid=2720700" இருந்து மீள்விக்கப்பட்டது