கிளென் மாக்சுவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளென் மாக்சுவெல்
Glenn Maxwell
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளென் ஜேம்சு மாக்சுவெல்
பிறப்பு14 அக்டோபர் 1988 (1988-10-14) (அகவை 35)
கியூ, மெல்பேர்ண், ஆத்திரேலியா
உயரம்182 செமீ (5 அடி 11½ அங்)[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம், பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 433)2 மார்ச் 2013 எ. இந்தியா
கடைசித் தேர்வு22 மார்ச் 2013 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 196)25 ஆகத்து 2012 எ. ஆப்கானித்தான்
கடைசி ஒநாப18 சனவரி 2015 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்32
இ20ப அறிமுகம் (தொப்பி 58)5 செப்டம்பர் 2012 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப5 அக்டோபர் 2014 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–இன்றுவிக்டோரியா (squad no. 32)
2011–2012மெல்பேர்ண் ரெனிகேட்சு
2012டெல்லி டேர்டெவில்ஸ்
2012, 2014ஆம்ப்சயர்
2012–இன்றுமெல்பேர்ண் ஸ்டார்சு
2013மும்பை இந்தியன்ஸ்
2013சரே
2014–இன்றுகிங்சு இலெவன் பஞ்சாபு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப
ஆட்டங்கள் 7 136 98
ஓட்டங்கள் 339 3,892 2,159
மட்டையாட்ட சராசரி 26.07 35.70 28.40
100கள்/50கள் 1/0 4/23 3/10
அதியுயர் ஓட்டம் 104 201* 145*
வீசிய பந்துகள் 462 3,623 865
வீழ்த்தல்கள் 8 69 39
பந்துவீச்சு சராசரி 42.62 48.02 27.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/127 4/40 3/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/— 84/– 41/—
மூலம்: கிரிக்கின்ஃபோ, 8 நவம்பர் 2023

கிளென் ஜேம்சு மாக்சுவெல் (Glenn James Maxwell, பிறப்பு: 14 அக்டோபர் 1988) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் விக்டோரிய மாநில துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். ஆத்திரேலிய தேசிய அணியில் தேர்வு, ஒருநாள், இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் வலக்கை புறத்திருப்பப் பந்துவீச்சாளராகவும், வலக்கைத் துடுப்பாட்ட வீரராகவும் உள்ளார்.[2]

2013 பெப்ரவரியில், இந்தியன் பிரீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.[3] 2013 மார்ச் மாதத்தில் தனது முதலாவது தேர்வு ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராக ஐதராபாதில் விளையாடினார்.[4] 2017 நவம்பரில், தனது முதலாவது இரட்டைச் சதத்தை (278) செஃபீல்டு சீல்டு போட்டியில் எடுத்தார்.[5][6] 2023 அக்டோபரில், உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் மிக விரைவான சதத்தைப் பதிவு செய்தார். நெதர்லாந்துக்கு எதிராக 40 பந்துகளை எதிர்கொண்டு இந்தச் சாதனையை அடைந்தார்.

2023 நவம்பரில், உலகக்க்கிண்ணத்தில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும்,[7] பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த ஒரே ஆத்திரேலியர் என்ற சாதனையையும் படைத்தார்.[8]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2012[தொகு]

2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியில் இடம்பெற்றிருந்த டிராவிஸ் பிட் அணியிலிருந்து பின்வாங்கியதனால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிரடி மட்டையாளராகவும் , வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் சிறந்த களதடுப்பாளராகவும் சகலத் துறையராக விளங்கி அணியில் சிறப்பாக செயல்பட்டார்.[9]

2013[தொகு]

2013 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.

2014[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் நிருவாகத்தின் கொள்கையின்படி இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் இவரை கிங்சு இலெவன் பஞ்சாபு அணி இவரை 6 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் 43 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 15 நான்குகளுக், இரு ஆறுகளும் அடங்கும். இதனால் 206 எனும் இலக்கினை 18.5 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற உதவினார். பின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார். மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கான மூன்றாவது போட்டியில் 43 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 9 ஆருகளும், ஐந்து நான்குகளும் அடங்கும். அணிஅயை வெற்றிபெறச் செய்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இது இவர் பெறும் மூன்றாவது ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மே 7, 2014 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஆறு நான்குகளும், எட்டு ஆறுகளும் அடங்கும்.மேலும் சுரேஷ் ரைனாவின் இலக்கினை வீழ்த்தினார். நான்காவது முறையாக ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 231 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி எனும் சாதனையைப் படைக்க உதவினார்.[10] இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் தரவரிசையில் மூன்ராவது இடம் பிடித்தார். இவரின் சராசரி 34.50 ஆகும்.[11]

2015[தொகு]

2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். ஆனால் இந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினார். 11 போட்டிகளில் விளையாடி 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்ச ஓட்டம் 43, இவரின் சராசரி 13.18 ஆகும்.[12]

சிறப்பான செயல்பாடுகள்[தொகு]

மட்டையாடியது
ஓட்டங்கள் போட்டி இடம் பருவம்
தேர்வுத் துடுப்பாட்டம் 104 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி v இந்தியத் துடுப்பாட்ட அணி ராஞ்சி, இந்தியா 2016/17 [13]
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் 102 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி v இலங்கைத் துடுப்பாட்ட அணி சிட்னி துடுப்பாட்ட மைதானம் 2015 [14]
பன்னாட்டு இருபது20 145 நாட் அவுட் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி v இலங்கைத் துடுப்பாட்ட அணி பல்லேகலே பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் 2016 [15]
முதல் தரத் துடுப்பாட்டம் 278 விக்டோரிய துடுப்பாட்ட அணி (எதிர்) நியூ சவுத்து வேல்சு புளூசு ஓவல் துடுப்பாட்ட மைதானம்[16] 2017/18 [17]
பட்டியல் அ 146 ஹேம்ஷயர் (எதிர்) லன்காஷயர் ஓல்டு டிரஃபோர்டு துடுப்பாட்ட மைதானம் 2014 [18]
பன்னாட்டு இருபது20 145 நாட் அவுட் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி v இலங்கைத் துடுப்பாட்ட அணிபல்லேகலே பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் 2016 [15]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மாக்சுவெல் 2022 மார்ச்சில் நீண்டகாலம் நட்பில் இருந்த வினி இராமன் என்ற இந்திய வம்சாவளுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.[19][20][21] இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.[22]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Glenn Maxwell". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
 2. "Glenn Maxwell: Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. "Million dollar Maxwell lights up IPL auction". Wisden India. 3 பெப்ரவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2013-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131101210642/http://www.wisdenindia.com/cricket-news/million-dollar-maxwell-lights-auction/48511. 
 4. "Maxwell debuts as Australia opt to bat". Wisden India. 2 மார்ச் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130412042447/http://www.wisdenindia.com/match-report/maxwell-debuts-australia-opt-bat/52939. 
 5. "Glenn Maxwell Smashes Double Century in Sheffield Shield | Wisden" (in en-GB). Wisden. 24 November 2017. https://www.wisden.com/stories/match-coverage/glenn-maxwell-makes-ashes-appeal-with-maiden-first-class-double-century. 
 6. "11th match, Sheffield Shield at Sydney, Nov 24-27 2017 | Match Summary | ESPNCricinfo". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
 7. "Sensational Maxwell leads Australia to semi-finals" (in en-GB). BBC Sport. https://www.bbc.com/sport/cricket/67344530. 
 8. "Glenn Maxwell heist: Incredible stats behind one of the greatest ODI knocks ever" (in en). ICC. https://www.icc-cricket.com/news/3772811#:~:text=Maxwell%20also%20became%20the%20first,a%20men's%20ODI%20double%20hundred.. 
 9. "Delhi Daredevils pick Bodi, Maxwell". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
 10. Kanishkaa Balachandran (7 May 2014). "Maxwell 90 leads rout of Super Kings". http://www.espncricinfo.com/indian-premier-league-2014/content/story/742673.html. 
 11. "Batting and Fielding in Indian Premier League 2014". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
 12. "Twenty20 Batting and Fielding in Each Season by Glenn Maxwell". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
 13. "Australia tour of India – India v Australia Scorecard". ESPNcricinfo. 20 March 2017. http://www.espncricinfo.com/series/10839/scorecard/1062575/India-vs-Australia-3rd-Test-ind-v-aus-2016-17/. பார்த்த நாள்: 25 November 2017. 
 14. "ICC Cricket World Cup, 2015 – Australia v Sri Lanka Scorecard". ESPNcricinfo. 8 March 2017. http://www.espncricinfo.com/series/8039/scorecard/656461/Australia-vs-Sri-Lanka-32nd-Match,-Pool-A-world-cup. பார்த்த நாள்: 25 November 2017. 
 15. 15.0 15.1 "Australia tour of Sri Lanka, 2016 – Sri Lanka v Australia Scorecard". ESPNcricinfo. 6 September 2016. http://www.espncricinfo.com/series/8039/scorecard/656461/Australia-vs-Sri-Lanka-32nd-Match,-Pool-A-world-cup. பார்த்த நாள்: 25 November 2017. 
 16. cricket.com.au (2017-11-24), Glenn Maxwell's epic Shield knock ends on 278, பார்க்கப்பட்ட நாள் 2017-11-28
 17. "Sheffield Shield, 2017/18 – New South Wales v Victoria Scorecard". ESPNcricinfo. 27 November 2017. http://www.espncricinfo.com/series/8043/scorecard/1118874/New-South-Wales-vs-Victoria-11th-match-Sheffield-Shield-2017-18. பார்த்த நாள்: 25 November 2017. 
 18. "Royal London One-Day Cup, 2014 – Lancashire v Hampshire Scorecard". ESPNcricinfo. 27 July 2014. http://www.espncricinfo.com/series/8335/scorecard/693293/Lancashire-vs-Hampshire-Group-A-royal-london-one-day-cup/. பார்த்த நாள்: 25 November 2017. 
 19. "Glenn Maxwell announces engagement to Indian-origin girlfriend Vini Raman". India Today. 26 February 2020. https://www.indiatoday.in/sports/cricket/story/glenn-maxwell-girlfriend-vini-raman-engagement-photos-instagram-australia-cricket-india-1650253-2020-02-26. 
 20. "Who is Vini Raman, Glenn Maxwell's Fiance who Loves Him More than Jimmy Neesham".
 21. "Australian all-rounder Glenn Maxwell ties knot with Vini Raman, shares wedding photos; RCB wishes the newlyweds". Timesnow. 19 March 2022. https://www.timesnownews.com/sports/cricket/australian-all-rounder-glenn-maxwell-marries-vini-raman-and-shares-wedding-photos-rcb-wishes-the-newlyweds-article-90317922. 
 22. https://www.thestatesman.com/sports/glenn-maxwell-and-wife-vini-raman-welcome-son-logan-maverick-1503222472.html/amp&ved=2ahUKEwjG-Oewr7KCAxWcg_0HHWuFAyoQFnoECAwQBQ&usg=AOvVaw2EapPNE4U3qpsto0loQiru

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்_மாக்சுவெல்&oldid=3823620" இலிருந்து மீள்விக்கப்பட்டது