ஆரன் பிஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரன் பிஞ்ச்
Aaron Finch
Aaron Finch.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆரன் ஜேம்சு பிஞ்ச்
பட்டப்பெயர் ஃபிஞ்சி
வகை மேல்-நிலைத் துடுப்பாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை மெதுவான இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 197) 11 சனவரி, 2013: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 21 நவம்பர், 2014:  எ தென்னாப்பிரிக்கா
சட்டை இல. 16
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007–இன்று விக்டோரியா (squad no. 5)
2011–2012 டெல்லி டேர்டெவில்ஸ்
2011–இன்று மெல்பேர்ண் ரெனகேட்சு
2012–இன்று ஆக்லாந்து ஏசசு
2013 புனே வாரியர்சு இந்தியா
2014–இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்
{{{year7}}} யோர்க்சயர் கவுன்டி (squad no. 20)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒநாஇ20பமுதபஅ
ஆட்டங்கள் 36 22 46 98
ஓட்டங்கள் 1304 756 2,240 3,684
துடுப்பாட்ட சராசரி 37.25 39.78 29.47 39.61
100கள்/50கள் 6/5 1/5 3/15 9/19
அதிக ஓட்டங்கள் 148 156 122 154
பந்து வீச்சுகள் 52 12 320 241
இலக்குகள் 2 0 4 7
பந்துவீச்சு சராசரி 22.50 61.50 29.85
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/2 1/0 2/44
பிடிகள்/ஸ்டம்புகள் 16/– 5/– 46/– 38/–

டிசம்பர் 13, 2014 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

ஆரன் ஜேம்சு பிஞ்ச் (Aaron James Finch, பிறப்பு: 17 நவம்பர் 1986) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். யோர்க்சயர் வைக்கிங்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், விக்டோரிய மாநில அணி, மெல்பேர்ண் ரெனெகேட்சு, மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளில் விளையாடி வருகிறார். வலக்கை துடுப்பாடுபவரான இவர் 2006 இல் இலங்கையில் நடைபெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலககிண்ணப் போட்டிகளில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[1]

2013 ஆகத்து 29 இல் இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 156 ஓட்டங்கள் எடுத்து இவ்வாறான விளையாட்டில் அதிகூடிய ஓட்டங்கள் எடுத்த சாதனையாளராகத் திகழ்கிறார்.[2] பின் சூலை 2, 2018இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 172 ஓட்டங்கள் எடுத்து தனது முந்தைய சாதனையைத் தகர்த்தார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

சனவரி 12, 2011இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவரின் அதிரடியாக மட்டையாடும் திறனைக்கண்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் இருபது20 போட்டிக்காக இவரை அணியில் சேர்த்தது. பின் சனவரி 11, 2013 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

ஆகத்து 29, 2013 ஆம் ஆண்டில் ரோச் பவுலில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 63 பந்துகளில் 156 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதில் 14 ஆறுகளும், 11 நான்குகளும் அடங்கும். இதன்மூலம் அதிக ஆறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[3] இதற்கு முன் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரர் பிரண்டன் மெக்கல்லம் 123 எடுத்ததே சாதனையாக இருந்தது.[4] சனவரி 14, 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 150 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். திசம்பர் 3, 2014 இல் டாம் கூப்பர், மற்றும் மைக்கல் கிளார்குடன் இணைந்து பிலிப் ஹியூசின் பிணப்பேழையைத் தூக்கினார்.[5]

பின்ச், 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணியில் இடம் பிடித்தார். இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 135 ஓட்டங்கள் எடுத்து ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு இவர் உதவினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.

2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அணியைத் தேர்வுசெய்பவர்களான மார்க் வா மற்றும் லீமன் ஆகியோர் இவரைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் அதன்பின் வந்த போட்டிகளில் இவருக்கு இடம் வழங்கப்பட்டதால் சிறப்பாக செயல்பட்டு அந்தாண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின், பன்னாட்டு இருபது20 மட்டையாளருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஆகத்து 31, 2016 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் மிக குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்த ஆத்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சைமன் ஓ டோன்னல் இந்தச் சாதனையைப் படைத்தார்.[6]

ஆரோன் பின்ச் தலைவராக அவரின் செயல்பாடு
  போட்டிகள் வெற்றி தோல்வி சமன் சமன்முடிவில்லை வெற்றி சதவீதம்
945 00 44.44%
2 020 0 00%
Date last Updated: 30 January 2017

மேற்கோள்கள்[தொகு]

  1. "Youth One-Day International Matches played by Aaron Finch (10)". CricketArchive. பார்த்த நாள் 2010-01-24.
  2. John Mehaffey (30 ஆகத்து 2013). "Finch breaks McCullum's T20 world record". stuff.co.nz. http://www.stuff.co.nz/sport/cricket/9105241/Finch-breaks-McCullums-T20-world-record. பார்த்த நாள்: 30 ஆகத்து 2013. 
  3. "Records | Twenty20 Internationals | Batting records | Most runs in an innings | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/slc-twenty20-15/content/records/284262.html. 
  4. John Mehaffey (30 August 2013). "Finch breaks McCullum's T20 world record". stuff.co.nz. http://www.stuff.co.nz/sport/cricket/9105241/Finch-breaks-McCullums-T20-world-record. பார்த்த நாள்: 30 August 2013. 
  5. Lessons of Hughes' life unforgettable in death
  6. "Finch scores 18 ball fifty". ESPN Cricinfo. பார்த்த நாள் 31 August 2016.
  7. "List of Twenty20 Captains". Cricinfo. மூல முகவரியிலிருந்து 22 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 September 2015.
  8. "List of Twenty20 Captains". Cricinfo. மூல முகவரியிலிருந்து 27 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 September 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரன்_பிஞ்ச்&oldid=2719009" இருந்து மீள்விக்கப்பட்டது